காரிருளால் மூடப்பட்ட / Kaarirulaal Moodappatta / Karirulal Moodappatta
1
காரிருளால் மூடப்பட்ட
பர்வதங்கள் மேலே பார்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜோதி தோன்றச் செய்கிறார்
அதற்காக
நெஞ்சமே மகிழ்ச்சி கொள்
2
அதைத் தேசத்தார் எல்லாரும்
காணச் செய்யும் கர்த்தரே
அந்தகாரமுள்ள யாரும்
அதால் சீராவார்களே
நீர் சகித்த
சாவின் பலன் அதுவே
3
இப்போ லட்ச லட்சமான
பேர்கள் அருள் பெற்றது
உம்முடைய உண்மையான
அன்பினாலே ஆயிற்று
அதற்காக
உமக்கே மா ஸ்தோத்திரம்