ஜீவனாம் எந்தன் இயேசுவே | Jeevanaam Endhan Yesuve / Jeevanaam Endhan Yesuvae
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே
நிழலைப் போல் எந்தன் கூட நீர்
வருவதடியேனின் புண்ணியமே
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
1.
திருமுகத்தை நான் நோக்கி நிற்கவே
இருதயத்திற்குள் ஆனந்தம்
திருமுகத்தை நான் நோக்கி நிற்கவே
இருதயத்திற்குள் ஆனந்தம்
திருவிலாவிலே குருதி சொரிந்து நீர்
துயரமென்னும் இருள் நீக்கிடும்
திருவிலாவிலே குருதி சொரிந்து நீர்
துயரமென்னும் இருள் நீக்கிடும்
எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும்
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
2.
இயேசுநாயகா சத்யரூபனே
சுகம் கொடுப்பவனே சிநேகிதா
இயேசுநாயகா சத்யரூபனே
சுகம் கொடுப்பவனே சிநேகிதா
கடலலைகளில் அலையும் என் தோணி
கரையிலேற்றணுமே தெய்வமே
கடலலைகளில் அலையும் என் தோணி
கரையிலேற்றணுமே தெய்வமே
நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு நாதா
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே
நிழலைப் போல் எந்தன் கூட நீர்
வருவதடியேனின் புண்ணியமே
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
ஜீவனாம் எந்தன் இயேசுவே | Jeevanaam Endhan Yesuve / Jeevanaam Endhan Yesuvae | Maria Mathew Kolady / Maria Kolady | Soby Chacko | A. Pravin Asir / Soby Chacko
