ஐயனே உமது திருவடிகளுக்கே / Iyyane Umadhu Thiruvadigalukke / Iyane Umathu Thiruvadi Kaalukke / Iyyane Umathu Thiruvadi Galukke

ஐயனே உமது திருவடிகளுக்கே / Iyyane Umadhu Thiruvadigalukke / Iyane Umathu Thiruvadi Kaalukke / Iyyane Umathu Thiruvadi Galukke

1
ஐயனே உமதுதிருவடி களுக்கே
ஆயிரந்தரந் தோத்திரம்
மெய்யனே உமது தயைகளை அடியேன்
விவரிக்க எம்மாத்திரம்

2
சென்றதாம் இரவில் தேவரீனென்னைச்
சேர்த்தரவணைத்தீரே
அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
யாகவா தரிப்பீரே

3
இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
ஏழையைக் குணமாக்கும்
கருணையாய் என்னை உமதகமாக்கிக்
கன்மமெல்லாம் போக்கும்

4
நாவிழி செவியை நாதனே இந்த
நாளெல்லாம் நீர் காரும்
தீவினை விலகிநான் திருமுகம் நோக்க
தெய்வமே அருள்கூரும்

5
கைகாலால் நான் பவம்புரி யாமல்
சுத்தனே துணை நில்லும்
துய்யனே உம்மால் தான் எனதிதயம்
தூய்வழியே செல்லும்

6
ஊழியந் தனைநான் உண்மையாச் செய்ய
உதவி நீர் செய்வீரே
ஏழைநான் உமக்கே இசையநல் ஆவி
இன்பமாய்ப் பெய்வீரே

7
அத்தனே உமது மகிமையை நோக்க
அயலான் நலம்பார்க்கச்
சித்தமாய் அருளும் மெய்விசுவாசம்
தேவனே உமக்கேற்க

8
இன்றும் என் மீட்பைப் பயம் நடுக்கத்தோ
டேயடியேன் நடத்தப்
பொன்றிடா பலமே தாரும் என் நாளைப்
பூவுலகில் கடத்த

9
இந்த நாளிலுமே திருச்சபை வளர
ஏகா தயைகூரும்
தந்தையே நானதற் குதவியாயிருக்கத்
தற்பரா வரந்தாரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

BEFORE YOU PROCEED, SHARE YOUR THOUGHTS AND PRAYERS AT: http://www.PrayForPeaceOfJerusalem.com

BEFORE YOU PROCEED, SHARE YOUR FAVORITE VERSE AT: http://www.BibleBookChapterVerse.com

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!