இன்னோர் ஆண்டு முற்றுமாய் / Innor Aandu Mutrumaai / Innor Aandu Mutrumai / Innor Andu Mutrumai

இன்னோர் ஆண்டு முற்றுமாய் / Innor Aandu Mutrumaai / Innor Aandu Mutrumai / Innor Andu Mutrumai

1   
இன்னோர் ஆண்டு முற்றுமாய்
எங்களை மகா அன்பாய்
காத்து வந்தீர் இயேசுவே
உம்மைத் துதி செய்வோமே

2   
நீரே இந்த ஆண்டிலும்
எங்கள் துணையாயிரும்
எந்தத் துன்பம் தாழ்விலும்
கூடத் தங்கியருளும்

3   
யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின் உந்தன் கோலாலே
தேற்றும் நல்ல மேய்ப்பரே

4   
நாங்கள் உந்தன் தாசராய்
தூய்மை பக்தி உள்ளோராய்
சாமட்டும் நிலைக்க நீர்
காத்து கிரீடம் ஈகுவீர்

5   
ஏக கர்த்தராம் நீரே
மன்னர் மன்னன் எனவே
என்றும் உம்மைப் போற்றுவோம்
உந்தன் வீட்டில் வாழுவோம்

இன்னோர் ஆண்டு முற்றுமாய் / Innor Aandu Mutrumaai / Innor Aandu Mutrumai / Innor Andu Mutrumai | S. James Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!