இம்மானுவேலே வாரும் வாருமே / Immanuvele Vaarum Vaarume / Immanuvele Varum Varume

இம்மானுவேலே வாரும் வாருமே / Immanuvele Vaarum Vaarume / Immanuvele Varum Varume

1   
இம்மானுவேலே வாரும் வாருமே
மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே
மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்

மகிழ் மகிழ் சீயோனின் சபையே
இம்மானுவேலின் நாள் சமீபமே

2   
ஈசாயின் வேர்த் துளிரே வாருமே
பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே
பாதாள ஆழம் நின்று ரட்சியும்
வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்

மகிழ் மகிழ் சீயோனின் சபையே
இம்மானுவேலின் நாள் சமீபமே

3   
அருணோதயமே ஆ வாருமே
வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே
மந்தார ராவின் மேகம் நீக்கிடும்
இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்

மகிழ் மகிழ் சீயோனின் சபையே
இம்மானுவேலின் நாள் சமீபமே

4   
தாவீதின் திறவுகோலே வாருமே
விண் வாசலைத் திறந்து தாருமே
ஒடுக்கமாம் நல் வழி காத்திடும்
விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்

மகிழ் மகிழ் சீயோனின் சபையே
இம்மானுவேலின் நாள் சமீபமே

5   
மா வல்ல ஆண்டவா வந்தருளும்
முற்காலம் சீனாய் மலைமீதிலும்
எக்காளம் மின்னலோடு தேவரீர்
பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்

மகிழ் மகிழ் சீயோனின் சபையே
இம்மானுவேலின் நாள் சமீபமே

இம்மானுவேலே வாரும் வாருமே / Immanuvele Vaarum Vaarume / Immanuvele Varum Varume

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!