இம்மானுவேல் நீரே / Immanuvel Neerae / Immanuvel Neere
1
வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசயவானே
புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே
தேன் இனிமையிலும் இனிமையான அழகியவானே
பேரொளியில் என்னை நடக்கச் செய்தீரே
நீங்க வந்திட்டதால பாவம் போச்சு
கவலையெல்லாம் போயே போச்சு
சாபங்கள் எல்லாம் மறைஞ்சி போனதே
தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
மனிதனாக மாறி இங்கே
அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே
நான் உம்மைப் போற்றுவேன்
நான் உம்மைப் புகழுவேன்
தினம் நன்றி சொல்லி அன்பை பாடி
உம்மை வணங்குவேன்
என் இம்மானுவேல் நீரே
நீர் என்னோடு இருக்கின்றீரே
இனி எந்நாளுமே உம் நாமமே
பாடிப் போற்றுவேனே
என் இம்மானுவேல் நீரே
நீர் என்னோடு இருக்கின்றீரே
இனி எந்நாளுமே உம் நாமமே
பாடிப் போற்றுவேனே
2
ஆதித் திரு வார்த்தையே
விடிவெள்ளி நட்சத்திரமே
பரலோக இராஜாவே நீர்தான் இயேசைய்யா
கன்னியின் மைந்தனாக
யூத ராஜ சிங்கமாக
தேவ ஆட்டுக் குட்டியாய் வந்தீர் இயேசைய்யா
நியாய பிரமானத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
களிகூர்ந்து பாடுவேன்
இம்மானுவேல் நீரே
நீர் என்னோடு இருக்கின்றீரே
இனி எந்நாளுமே உம் நாமமே
பாடிப் போற்றுவேனே
என் இம்மானுவேல் நீரே
நீர் என்னோடு இருக்கின்றீரே
இனி எந்நாளுமே உம் நாமமே
பாடிப் போற்றுவேனே
வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசயவானே
புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே
தேன் இனிமையிலும் இனிமையான அழகியவானே
பேரொளியில் என்னை நடக்கச் செய்தீரே
நீங்க வந்திட்டதால பாவம் போச்சு
கவலையெல்லாம் போயே போச்சு
சாபங்கள் எல்லாம் மறைஞ்சி போனதே
தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
மனிதனாக மாறி இங்கே
அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே
நான் உம்மைப் போற்றுவேன்
நான் உம்மைப் புகழுவேன்
தினம் நன்றி சொல்லி அன்பை பாடி
உம்மை வணங்குவேன்
என் இம்மானுவேல் நீரே
நீர் என்னோடு இருக்கின்றீரே
இனி எந்நாளுமே உம் நாமமே
பாடிப் போற்றுவேனே
என் இம்மானுவேல் நீரே
நீர் என்னோடு இருக்கின்றீரே
இனி எந்நாளுமே உம் நாமமே
பாடிப் போற்றுவேனே
என் இம்மானுவேல் நீரே
நீர் என்னோடு இருக்கின்றீரே
இனி எந்நாளுமே உம் நாமமே
பாடிப் போற்றுவேனே
என் இம்மானுவேல் நீரே
நீர் என்னோடு இருக்கின்றீரே
இனி எந்நாளுமே உம் நாமமே
பாடிப் போற்றுவேனே
இம்மானுவேல் நீரே / Immanuvel Neerae / Immanuvel Neere | Benny Pradeep
great super song akka
Very nice