என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே | Ennai Belapaduthugira Kiristhuvinaalae / Ennai Belapaduththugira Kirisththuvinaalae
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு
நான் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு
1
நான் எந்த நிலைமையில் இருந்தாலும்
நான் மன ரம்மியமாய் இருக்கின்றேன்
நான் எந்த நிலைமையில் இருந்தாலும்
நான் மன ரம்மியமாய் இருக்கின்றேன்
பட்டினியாய் இருந்தாலும் பரிபூரணம் அடைந்தாலும்
தாழ்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் போதிக்கப்பட்டேன் நான்
தாழ்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் போதிக்கப்பட்டேன்
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு
நான் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு
2
என் தேவன் யெகோவா ஈரே
என் தேவை யாவையும் தருவாரே
என் தேவன் யெகோவா ஈரே
என் தேவை யாவையும் தருவாரே
தமது ஐஸ்வரியத்தின்படியே எனது குறைவை நிறைவாக்கும்
இயேசுவை விசுவாசித்தே தேவ மகிமையைக் காண்பேன் நான்
இயேசுவை விசுவாசித்தே தேவ மகிமையைக் காண்பேன்
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு நான்
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு
3
நான் சோம்பலின் அப்பம் புசியாமல்
நான் சோர்ந்து தரித்திரம் அடையாமல்
நான் சோம்பலின் அப்பம் புசியாமல்
நான் சோர்ந்து தரித்திரம் அடையாமல்
உற்சாகமாக உழைத்திடுவேன் உண்மை ஊழியம் செய்திடுவேன்
தேவனை அதிகாலை தோறும் தேடி கண்டடைவேன் நான்
தேவனை அதிகாலை தோறும் தேடி கண்டடைவேன்
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு நான்
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு
4
நான் கர்த்தருக்கு காத்திருந்தே
நான் புது பெலனை அடைந்திடுவேன்
நான் கர்த்தருக்கு காத்திருந்தே
நான் புது பெலனை அடைந்திடுவேன்
கழுகுப்போல செட்டைகளை அடித்து நானும் எழும்பிடுவேன்
நடந்திட்டாலும் ஓடினாலும் சோர்ந்திடமாட்டேன் நான்
நடந்திட்டாலும் ஓடினாலும் சோர்ந்திடமாட்டேன்
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு நான்
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு
5
நான் இயேசுவை மிக நேசிக்கிறேன்
நான் அவருக்காகவே ஜீவிக்கிறேன்
நான் இயேசுவை மிக நேசிக்கிறேன்
நான் அவருக்காகவே ஜீவிக்கிறேன்
அநேக எதிர்ப்புகள் மத்தியிலும் அதிக ஊழியம் செய்திடுவேன்
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் என் பட்சம் இருப்பார் இயேசு
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் என் பட்சம் இருப்பார்
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு நான்
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு
6
என் இயேசு சீக்கிரம் வருவாரே
நான் அவருக்காகவே காத்திருப்பேன்
என் இயேசு சீக்கிரம் வருவாரே
நான் அவருக்காகவே காத்திருப்பேன்
அவனவன் கிரியைபடியே அவர் அருளும் பிரதிபலனே
ஆண்டவர் வரும்போது தம்முடன் கொண்டுவருவாரே இயேசு
ஆண்டவர் வரும்போது தம்முடன் கொண்டுவருவாரே
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு நான்
எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு
நான் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே | Ennai Belapaduthugira Kiristhuvinaalae / Ennai Belapaduththugira Kirisththuvinaalae | Bethel AG Church, Kolathur, Chennai, Tamil Nadu, India | Sarah Navaroji