என் இயேசுவே எந்தன் | En Yesuve Endhan / En Yesuve Enthan
1
என் இயேசுவே எந்தன் சிநேகிதரே
எல்லா காலத்திலும் சிநேகித்து வந்தீர்
என் இயேசுவே எந்தன் சிநேகிதரே
எல்லா காலத்திலும் சிநேகித்து வந்தீர்
மனதார உம்மோடு பேசிடுவேன்
உள்ளத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
மனதார உம்மோடு பேசிடுவேன்
உள்ளத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
உம் மார்பில் சாய்ந்து உம்மோடு இருப்பேன்
பொய்யுலகை நாடி ஓடிடமாட்டேன்
உம் மார்பில் சாய்ந்து உம்மோடு இருப்பேன்
பொய்யுலகை நாடி ஓடிடமாட்டேன்
நேசரின் நேசத்தில் இளைப்பாறுவேனே
இயேசுவே நீர் போதுமே
நேசரின் நேசத்தில் இளைப்பாறுவேனே
இயேசுவே நீர் போதுமே
2
தேவனால் கூடாததொன்றில்லையே
ஒருவராய் அதிசயம் செய்திடுவாரே
தேவனால் கூடாததொன்றில்லையே
ஒருவராய் அதிசயம் செய்திடுவாரே
இருதய பாரத்தைச் சொல்லிடுவேன்
அகமதில் ஆறுதல் அடைந்திடுவேன்
இருதய பாரத்தைச் சொல்லிடுவேன்
அகமதில் ஆறுதல் அடைந்திடுவேன்
உம் மார்பில் சாய்ந்து உம்மோடு இருப்பேன்
பொய்யுலகை நாடி ஓடிடமாட்டேன்
உம் மார்பில் சாய்ந்து உம்மோடு இருப்பேன்
பொய்யுலகை நாடி ஓடிடமாட்டேன்
நேசரின் நேசத்தில் இளைப்பாறுவேனே
இயேசுவே நீர் போதுமே
நேசரின் நேசத்தில் இளைப்பாறுவேனே
இயேசுவே நீர் போதுமே
3
சிலுவையில் கோரமாய்ப் பாடுபட்டு
இரத்தத்தை முற்றிலும் எனக்காய் சிந்தினீர்
சிலுவையில் கோரமாய்ப் பாடுபட்டு
இரத்தத்தை முற்றிலும் எனக்காய் சிந்தினீர்
ஜீவனை ஊற்றின மா தயவே
என் ஜீவனை வார்த்து சிநேகிப்பேனே
ஜீவனை ஊற்றின மா தயவே
என் ஜீவனை வார்த்து சிநேகிப்பேனே
உம் மார்பில் சாய்ந்து உம்மோடு இருப்பேன்
பொய்யுலகை நாடி ஓடிடமாட்டேன்
உம் மார்பில் சாய்ந்து உம்மோடு இருப்பேன்
பொய்யுலகை நாடி ஓடிடமாட்டேன்
நேசரின் நேசத்தில் இளைப்பாறுவேனே
இயேசுவே நீர் போதுமே
நேசரின் நேசத்தில் இளைப்பாறுவேனே
இயேசுவே நீர் போதுமே
4
என்னை உமக்காக ஒப்புவித்தேன்
வாழ்வது இனிமேல் உமக்காகத் தானே
என்னை உமக்காக ஒப்புவித்தேன்
வாழ்வது இனிமேல் உமக்காகத் தானே
அபிஷேகத்தால் உம்மோடொன்றாக்கினீர்
உம்மில் நிலைத்துப் பிழைத்திடுவேன்
அபிஷேகத்தால் உம்மோடொன்றாக்கினீர்
உம்மில் நிலைத்துப் பிழைத்திடுவேன்
உம் மார்பில் சாய்ந்து உம்மோடு இருப்பேன்
பொய்யுலகை நாடி ஓடிடமாட்டேன்
உம் மார்பில் சாய்ந்து உம்மோடு இருப்பேன்
பொய்யுலகை நாடி ஓடிடமாட்டேன்
நேசரின் நேசத்தில் இளைப்பாறுவேனே
இயேசுவே நீர் போதுமே
நேசரின் நேசத்தில் இளைப்பாறுவேனே
இயேசுவே நீர் போதுமே
5
தாயின் கருவில் உருவாகுமுன்னே
கண்டெடுத்தீரே உம் அன்பினால் என்னை
தாயின் கருவில் உருவாகுமுன்னே
கண்டெடுத்தீரே உம் அன்பினால் என்னை
பரிசுத்தனாய்க் குற்றமில்லாதோனாய்
நிறுத்திடுவீரே உம் முன்பில் என்னை
பரிசுத்தனாய்க் குற்றமில்லாதோனாய்
நிறுத்திடுவீரே உம் முன்பில் என்னை
உம் மார்பில் சாய்ந்து உம்மோடு இருப்பேன்
பொய்யுலகை நாடி ஓடிடமாட்டேன்
உம் மார்பில் சாய்ந்து உம்மோடு இருப்பேன்
பொய்யுலகை நாடி ஓடிடமாட்டேன்
நேசரின் நேசத்தில் இளைப்பாறுவேனே
இயேசுவே நீர் போதுமே
நேசரின் நேசத்தில் இளைப்பாறுவேனே
இயேசுவே நீர் போதுமே
என் இயேசுவே எந்தன் | En Yesuve Endhan / En Yesuve Enthan