என் உள்ளத்தின் நோக்கம் எல்லாம் | En Ullathin Nokkam Ellam / En Ullaththin Nokkam Ellam
என் உள்ளத்தின் நோக்கம் எல்லாம்
உமக்காய் நான் வாழ்வதில்தான்
என் சிந்தையின் நோக்க மெல்லாம்
உம் சித்தம் செய்வதில்தான்
இயேசையா இயேசையா
உம் நாமம் என்றும் சார்வேன்
இயேசையா என் இயேசையா
உம்மார்பில் என்றும் சாய்வேன்
என் உள்ளத்தின் நோக்கம் எல்லாம்
உமக்காய் நான் வாழ்வதில்தான்
என் சிந்தையின் நோக்க மெல்லாம்
உம் சித்தம் செய்வதில்தான்
1
மனுவாக மண்மீது வந்தீரே
இம் மண்ணுக்கும் ஒரு ஜீவன் தந்தீரே
மனுவாக மண்மீது வந்தீரே
இம் மண்ணுக்கும் ஒரு ஜீவன் தந்தீரே
உருவான நாள் முதலாய்ப் பார்த்தீரே
உரு தந்து உயிரோடு எடுத்தீரே
உருவான நாள் முதலாய்ப் பார்த்தீரே
உரு தந்து உயிரோடு எடுத்தீரே
இயேசையா இயேசையா
உம் நாமம் என்றும் சார்வேன்
இயேசையா என் இயேசையா
உம்மார்பில் என்றும் சாய்வேன்
2
எனக்காக உயிர் தந்து மரித்தீரே
நான் உமக்காக மனுஜீவன் தருவேனே
எனக்காக உயிர் தந்து மரித்தீரே
நான் உமக்காக மனுஜீவன் தருவேனே
மறு வாழ்வும் உயர் உம்மில் பெறுவேனே
ஒரு மகனாக மடியினிலே அமர்வேனே
மறு வாழ்வும் உயர் உம்மில் பெறுவேனே
ஒரு மகளாக மடியினிலே அமர்வேனே
இயேசையா இயேசையா
உம் நாமம் என்றும் சார்வேன்
இயேசையா என் இயேசையா
உம்மார்பில் என்றும் சாய்வேன்
3
சிறுகூட்டுப் பறவைபோல் வந்தேனே
ஒரு தாய் போல அமுதளித்து வந்தீரே
சிறுகூட்டுப் பறவைபோல் வந்தேனே
ஒரு தாய் போல அமுதளித்து வந்தீரே
வரும்வேளை அறிந் தென்னை அழைத்தீரே
உம் திருநாமம் உரைத் தென்னை சுமந்தீரே
வரும்வேளை அறிந் தென்னை அழைத்தீரே
உம் திருநாமம் உரைத் தென்னை சுமந்தீரே
இயேசையா இயேசையா
உம் நாமம் என்றும் சார்வேன்
இயேசையா என் இயேசையா
உம்மார்பில் என்றும் சாய்வேன்
4
ஒரு நாளில் எனை அழைக்க வருவீரே
உம் கரம் கொண்டு புதுஆடை தருவீரே
புது நாமம் கொண் டென்னை அழைத்தீரே
உம் திருநாமம் என் முகத்தில் தரிப்பீரே
இயேசையா இயேசையா
உம் நாமம் என்றும் சார்வேன்
இயேசையா என் இயேசையா
உம்மார்பில் என்றும் சாய்வேன்
என் உள்ளத்தின் நோக்கம் எல்லாம்
உமக்காய் நான் வாழ்வதில்தான்
என் சிந்தையின் நோக்க மெல்லாம்
உம் சித்தம் செய்வதில்தான்
என் உள்ளத்தின் நோக்கம் எல்லாம்
உமக்காய் நான் வாழ்வதில்தான்
என் சிந்தையின் நோக்க மெல்லாம்
உம் சித்தம் செய்வதில்தான்
என் உள்ளத்தின் நோக்கம் எல்லாம் | En Ullathin Nokkam Ellam / En Ullaththin Nokkam Ellam | Jasper Zioni Chalcedony | Syres Wilfred | S. A. Prem Anand
Like this? Leave your thoughts below...