என் நேசர் தேடி வந்தார் | En Nesar Thedi Vanthar / En Nesar Thedi Vandhaar / En Nesar Thedi Vanthaar / En Nesar Thedi Vandhar
என் நேசர் தேடி வந்தார் எந்தனது கண்ணீர் கண்டார்
ஏழை என்னோடு கூடவே இருந்தாரே

1
சேனையின் கர்த்தரவர் பராக்கிரமசாலியவர்
சும்மாயிரு உனக்காய் யுத்தம் செய்வேன் என்றாரே

எனக்காய் யுத்தம் செய்து ஜெயமதை வாங்கித் தந்தார்
வாழ்நாளெல்லாம் அவரைப் போற்றிப் பாடுவேன்
எனக்காய் யுத்தம் செய்து ஜெயமதை வாங்கித் தந்தார்
வாழ்நாளெல்லாம் அவரைப் போற்றிப் பாடுவேன்
என் நேசர் தேடி வந்தார் எந்தனது கண்ணீர் கண்டார்
ஏழை என்னோடு கூடவே இருந்தாரே
என் நேசர் தேடி வந்தார் எந்தனது கண்ணீர் கண்டார்
ஏழை என்னோடு கூடவே இருந்தாரே
2
மனித சகாயமெல்லாம் விருதாவாய்ப் போய்விடினும்
தாயள்ளம் கொண்ட அன்பர் ஆற்றி அணைத்திட்டாரே

அன்பின் அடிகளாலும் ஆறுதல் மொழிகளாலும்
இன்னும் அவரைக் கிட்டிச் சேர உதவினாரே
அன்பின் அடிகளாலும் ஆறுதல் மொழிகளாலும்
இன்னும் அவரைக் கிட்டிச் சேர உதவினாரே
என் நேசர் தேடி வந்தார் எந்தனது கண்ணீர் கண்டார்
ஏழை என்னோடு கூடவே இருந்தாரே
என் நேசர் தேடி வந்தார் எந்தனது கண்ணீர் கண்டார்
ஏழை என்னோடு கூடவே இருந்தாரே
3
மரணத்தின் கண்ணி என்னைச் சுற்றி சூழ்ந்திட்ட போதும்
மரணத்தின் பெலன் அழித்து புதிய ஜீவனை ஈந்தார்

அக்கினி சோதனைகள் அலையென மோதிடினும்
விசுவாச பாதையிலே வெந்திடா காத்தீரன்றோ
அக்கினி சோதனைகள் அலையென மோதிடினும்
விசுவாச பாதையிலே வெந்திடா காத்தீரன்றோ
என் நேசர் தேடி வந்தார் எந்தனது கண்ணீர் கண்டார்
ஏழை என்னோடு கூடவே இருந்தாரே
என் நேசர் தேடி வந்தார் எந்தனது கண்ணீர் கண்டார்
ஏழை என்னோடு கூடவே இருந்தாரே
4
கர்த்தரை என் முன்பாக நிறுத்தி நோக்குவதினால்
அசைக்கப்படுவதில்லை மனுஷன் எனக்கென் செய்வான்

வானத்தைக் கிழித்திறங்கி சத்துருவை முறியடித்த
இராஜாதி இராஜன் ஜெயம் எந்தன் ஜெயமே
வானத்தைக் கிழித்திறங்கி சத்துருவை முறியடித்த
இராஜாதி இராஜன் ஜெயம் எந்தன் ஜெயமே
என் நேசர் தேடி வந்தார் எந்தனது கண்ணீர் கண்டார்
ஏழை என்னோடு கூடவே இருந்தாரே
என் நேசர் தேடி வந்தார் எந்தனது கண்ணீர் கண்டார்
ஏழை என்னோடு கூடவே இருந்தாரே
5
பிதாவே உம் இஷ்டம் மாத்திரம் என்னில் நிறைவேறட்டும்
என்றுரைத்த இயேசுவைப்போல் என்னை முற்றும் ஒப்புவித்தேன்

என்னிலே நற்கிரியை ஆரம்பித்ததாம் என் இயேசு
முடிவு வரை நடத்தி மகிமையில் ஏற்றுக்கொள்வார்