தெய்வாட்டுக்குட்டிக்கு / Deivaattukkutikku

தெய்வாட்டுக்குட்டிக்கு / Deivaattukkutikku

1           
தெய்வாட்டுக்குட்டிக்கு
பன் முடி சூட்டிடும்
இன்னிசையாப் பேரோசையாய்
விண் கீதம் முழங்கும்
உள்ளமே போற்றிடு
உனக்காய் மாண்டோராம்
சதா காலமும் அவரே
ஒப்பற்ற வேந்தராம்

2   
அன்பார்ந்த கர்த்தர்க்கு
பன் முடி சூட்டிடும்
கை கால் விலாவின் காயங்கள்
விண்ணிலும் விளங்கும்
பார்ப்பரோ தூதரும்
ஏறிட்டக் காயங்கள்
பணிவரே சாஷ்டாங்கமாய்
மூடுவர் தம் கண்கள்

3   
சமாதானக் கர்த்தர்
பன் முடி சூட்டிடும்
போர் ஓய்ந்து ஜெப
ஸ்தோத்ரமே
பூமியை நிரப்பும்
ஆள்வர் என்றென்றைக்கும்
ஆளும் எவ்விடமும்
விண் லோக பாக்கிய சிறப்பு
விளங்கி வளரும்

4   
ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு
பன் முடி சூட்டிடும்
சராசரங்கள் சிஷ்டித்தோர்
உன்னத தெய்வமும்
பாவிக்காய் ஆருயிர்
ஈந்த என் மீட்பரே
சதா நித்திய காலமாய்
உமக்குத் துதியே

தெய்வாட்டுக்குட்டிக்கு / Deivaattukkutikku | Holy Trinity Church Choir Fellowship

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!