சின்ன செல்லமே / Chinna Chellame / Chinna Chellamae
சின்ன செல்லமே அன்பே என் கண்மணியே
இயேசு பாலா ஏன் அழுதாயோ
தேடின ஞானிகள் ஏரோதின் அரண்மனைக்கு
வழி மாறி போனதால் அழுதாயோ
அங்கு போனதால் உம்மைப்போல் பிள்ளைகள் வெட்டுண்டு
மாண்டதால் அழுதாயோ
எந்தன் கண்ணே தூங்காயோ
சின்ன செல்லமே அன்பே என் கண்மணியே
இயேசு பால ஏன் அழுதாயோ
1
பெற்றோரும் தூதரும் அங்கே
உன்னை தூங்க வைத்தாரே
பெற்றோரும் தூதரும் அங்கே
உன்னை தூங்க வைத்தாரே
செவ்வழி இதழ் போன்ற இமைகளை மூடி
பூவே தூங்காயோ
ஆராரோ ஆராரோ ஆராரோ
சின்ன செல்லமே அன்பே என் கண்மணியே
இயேசு பாலா ஏன் அழுதாயோ
தேடின ஞானிகள் ஏரோதின் அரண்மனைக்கு
வழி மாறி போனதால் அழுதாயோ
2
ஊரே தூங்கும் இந்நேரம்
கண்ணே நீ மட்டும் விதிவிலக்கோ
ஊரே தூங்கும் இந்நேரம்
கண்ணே நீ மட்டும் விதிவிலக்கோ
வேதனை நேரத்தை சில நேரம் மறந்து
பூவே தூங்காயோ
ஆராரோ ஆராரோ ஆராரோ
சின்ன செல்லமே அன்பே என் கண்மணியே
இயேசு பாலா ஏன் அழுதாயோ
தேடின ஞானிகள் ஏரோதின் அரண்மனைக்கு
வழி மாறி போனதால் அழுதாயோ
அங்கு போனதால் உம்மைப்போல் பிள்ளைகள் வெட்டுண்டு
மாண்டதால் அழுதாயோ
எந்தன் கண்ணே தூங்காயோ
சின்ன செல்லமே அன்பே என் கண்மணியே
இயேசு பால ஏன் அழுதாயோ
சின்ன செல்லமே / Chinna Chellame / Chinna Chellamae | Tabitha, Joab | George Stephenson