Tamil Christian Songs starting with வ

வழி சேர்கிறேன் | Vazhi Sergiren

ஓடி ஓடி அலைந்தே திரிந்தேன்
தேடி தேடி எங்கும் உலகில் காணவில்லை
ஓடி ஓடி அலைந்தே திரிந்தேன்
தேடி தேடி எங்கும் உலகில் காணவில்லை

மனதின் பாரம் வலி ஆனதே
வலிகள் சேர்ந்தே கனக்கின்றதே
மனதின் பாரம் வலி ஆனதே
வலிகள் சேர்ந்தே கனக்கின்றதே

என் படுக்கை நித்தம் நனைகின்றதே
கண்ணீரிலே

கொஞ்சம் தானே விட்டு போனேன் மாய உலகை தேடி
பாவியாய் அலைகிறேன் பாரமாய் மண்ணில்
கொஞ்சம் தானே விட்டு போனேன் மாய உலகை தேடி
பாவியாய் அலைகிறேன் பாரமாய் மண்ணில்

உம் நினைவுகள் என்னை ஈர்க்குதே
உணர்ந்துகொண்டேன் உண்மையான அன்பை

முன் இருந்த அன்பு இப்போ எனக்கில்லை
ஆனாலும் ஆனாலும் நேசர் நீர் என்னை நினைக்கிறீர்

மெய்யான அன்பை மீண்டும் வேண்டும் என்றேன்
மாறாத அன்பை நீரோ என்றும் கொண்டு
அன்பாய் உம் கரம் நீட்டி அழைக்கிறீர்
உம்மிடம் என்னை வந்து சேர்க்கிறீர்

அதோ அதோ உம் குரல் கேட்கிறேன்
இதோ இதோ உம் வழி சேர்கிறேன்
அதோ அதோ உம் குரல் கேட்கிறேன்
இதோ இதோ உம் வழி சேர்கிறேன்

அன்பே அன்பே அன்பே என்னை அணைக்கின்ற அன்பே
அன்பே அன்பே அன்பே மனக் காயம் ஆற்றும் அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே புதிதாக்கும் அன்பே
அன்பே அன்பே முழுமையான அன்பே

அதோ அதோ உம் குரல் கேட்கிறேன்
இதோ இதோ உம் வழி சேர்கிறேன்
அதோ அதோ உம் குரல் கேட்கிறேன்
இதோ இதோ உம் வழி சேர்கிறேன்

வழி சேர்கிறேன் | Arun Immanuel | Vazhi Sergiren | Elisha | Jacqulin R

Don`t copy text!