Tamil Christian Songs starting with வ

வல்லமையின் ஆவியே / Vallamaiyin Aaviye / Valamaiyin Aaviye

வல்லமையின் ஆவியே
வல்லமையின் ஆவியே
எனக்குள்ளே வாருமே
என்னை உயிர் பெற செய்யுமே

வல்லமையின் ஆவியே
வல்லமையின் ஆவியே
எனக்குள்ளே வாருமே
என்னை உயிர் பெற செய்யுமே

1
தண்ணீரை ரசமாக மாற்றிய வல்லமை
குருடரின் கண்களை திறந்திட்ட வல்லமை
செவிடரை கேட்க செய்த உம் வல்லமை
பிசாசை துரத்தின அதிசய வல்லமை

வல்லமையின் ஆவியே
வல்லமையின் ஆவியே
எனக்குள்ளே வாருமே
என்னை உயிர் பெற செய்யுமே

2
செங்கடல் இரண்டாக பிளந்த உம் வல்லமை
பார்வோனின் சேனையை வீழ்த்திய வல்லமை
மேக ஸ்தம்பம் மேலிருந்து நடத்திய வல்லமை
வனாந்திரத்தில் மன்னாவை கொடுத்த உம் வல்லமை

வல்லமையின் ஆவியே
வல்லமையின் ஆவியே
எனக்குள்ளே வாருமே
என்னை உயிர் பெற செய்யுமே

3
காரிருள் இருந்து காத்த உம் வல்லமை
கன்மலை மேல் என்னை நிறுத்திய வல்லமை
பாவத்தில் இருந்து மீட்ட உம் வல்லமை
ரட்சிப்பை கொடுத்த உம் ரத்தத்தின் வல்லமை

வல்லமையின் ஆவியே
வல்லமையின் ஆவியே
எனக்குள்ளே வாருமே
என்னை உயிர் பெற செய்யுமே

தேவ ஆவியே
ஜீவா தண்ணீரே
அபிஷேகத்தினால் நிரப்புமே
உமக்காய் வாழ்ந்திட உமக்காய் உழைத்திட
உந்தன் கிருபையால் நிரப்புமே

வல்லமையின் ஆவியே
வல்லமையின் ஆவியே
எனக்குள்ளே வாருமே
என்னை உயிர் பெற செய்யுமே

வல்லமையின் ஆவியே
வல்லமையின் ஆவியே
எனக்குள்ளே வாருமே
என்னை உயிர் பெற செய்யுமே

Don`t copy text!