வாழ்க சிலுவையே வாழ்க / Vaalga Siluvaiye Vaalga / Valga Siluvaiye Valga
வாழ்க சிலுவையே வாழ்க / Vaalga Siluvaiye Vaalga / Valga Siluvaiye Valga
1
வாழ்க சிலுவையே வாழ்க
பாரமற்ற பாரமே
உன்னை முழுமனதார
தோள் மேல் ஏற்றிக் கொள்வேனே
2
இந்த நிந்தை லச்சை அல்ல
இது வெட்கம் அல்லவே
ஏனெனில் பொல்லாப்புக்கல்ல
நன்மைக்காக வருதே
3
உலகத்தின் ஜோதியான
இயேசு தாமும் நிந்தைக்கே
ஏதுவாகி ஈனமான
சிலுவையில் மாண்டாரே
4
சிலுவை சுமந்தோராக
அவரைப் பின்பற்றுவோம்
தீரங்கொண்டு வீரராக
துன்பம் நிந்தை சகிப்போம்
5
நேசர் தயவாய் நம்மோடு
சொல்லும் ஒரு வார்த்தையே
துக்கத்தை எல்லாம் கட்டோடு
நீங்கிப் போகச் செய்யுமே
6
சாகும்போது திறவுண்ட
வானத்தையும் அதிலே
மகிமையினால் சூழுண்ட
இயேசுவையும் காண்போமே
7
வாழ்க சிலுவையே வாழ்க
மோட்சத்தின் முன் தூதனே
நீதிமான்கள் இளைப்பாற
நேர் வழியாம் வாசலே