மேன்மை நிறைந்த ஆண்டவர் / Maenmai Niraindha Aandavar / Maenmai Niraintha Aandavar
மேன்மை நிறைந்த ஆண்டவர் / Maenmai Niraindha Aandavar / Maenmai Niraintha Aandavar
1
மேன்மை நிறைந்த ஆண்டவர்
பூலோகத்தார் எல்லார்க்கும்
தகுந்த நீதி செய்பவர்
இறங்கும் நாள் உதிக்கும்
அப்போது மா பிரஸ்தாபமாய்
எங்கும் விளங்கும் ஜோதியாய்
மின்போலத் தோன்றுவாரே
2
இலக்கமற்ற தூதர்கள்
அவர்க்கு முன்னதாக
பலத்த சத்த தாரைகள்
உடையவர்களாக
முழக்கம் செய்ய பூமியும்
விஸ்தாரமான வானமும்
கரைந்து வெந்துபோகும்
3
அத்தூதரின் எக்காளங்கள்
எத்திக்கிலும் முழங்கும்
அந்நேரம் மாந்தர் கூட்டங்கள்
உயிரடைந்தெழும்பும்
ஓர் பக்கத்தில் சன்மார்க்கரும்
ஓர் பக்கத்தில் துன்மார்க்கரும்
வணக்கமாய் நிற்பார்கள்
4
சன்மார்க்கர் மோட்ச பாதையில்
நடந்ததால் மகிழ்ந்து
சிறப்படைந்து நிற்கையில்
துன்மார்க்கரோ அதிர்ந்து
நியாயமான சாபத்தை
அடைந்து கர்த்தர் முகத்தை
விட்டோடி மாளுவார்கள்
5
என் மனமே துன்மார்க்கத்தை
வெறுத்துத் தள்ளிவிட்டு
அன்புள்ள இயேசு கிறிஸ்துவை
நம்பிக்கையாய்ப் பிடித்து
கறையும் மாசுமின்றியே
கர்த்தர் முன்பாக நிற்கவே
நீ ஆவலோடு தேடு