முன்னே சரீர வைத்தியனாம் / Munne Sareera Vaiththiyanaam
முன்னே சரீர வைத்தியனாம் / Munne Sareera Vaiththiyanaam
1
முன்னே சரீர வைத்தியனாம்
லூக்காவைத் தேவரீர்
ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும்
கர்த்தாவே அழைத்தீர்
2
ஆன்மாவின் ரோகம் நீக்கிடும்
மெய்யான வைத்தியரே
உம் வார்த்தையாம் மருந்தினால்
நற்சுகம் ஈயுமே
3
கர்த்தாவே பாவக் குஷ்டத்தால்
சா வேதனையுற்றோம்
உம் கரத்தால் தொட்டருளும்
அப்போது சுகிப்போம்
4
ஆன்மாக்கள் திமிர்வாத்தால்
மரித்துப் போயினும்
நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால்
திரும்ப ஜீவிக்கும்
5
துர் ஆசை தீய நெஞ்சிலே
தீப்போலக் காயினும்
உம் சாந்த சொல்லால் கோஷ்டத்தை
தணியச் செய்திடும்
6
எத்தீங்கும் நீக்கும் இயேசுவே
நற்பாதம் அண்டினோம்
உம் பூரண கடாட்சத்தால்
சுத்தாங்கம் பெறுவோம்