மாட்சி போரை போரின் ஓய்வை / Maatchi Porai Porin Oyvai / Matchi Porai Porin Oyvai
மாட்சி போரை போரின் ஓய்வை / Maatchi Porai Porin Oyvai / Matchi Porai Porin Oyvai
1
மாட்சி போரை போரின் ஓய்வை
பாடு என்தன் உள்ளமே
மாட்சி வெற்றி சின்னம் போற்றி
பாடு வெற்றி கீதமே
மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்
மாண்டு பெற்றார் வெற்றியே
2
காலம் நிறைவேற வந்தார்
தந்தை வார்த்தை மைந்தனாய்
ஞாலம் வந்தார் வானம் நீத்தே
கன்னித் தாயார் மைந்தனாய்
வாழ்ந்தார் தெய்வ மாந்தனாக
இருள் நீக்கும் ஜோதியாய்
3
மூன்று பத்து ஆண்டின் ஈற்றில்
விட்டார் வீடு சேவைக்காய்
தந்தை சித்தம் நிறைவேற்றி
வாழ்ந்தார் தந்தை சித்தமாய்
சிலுவையில் தம்மை ஈந்தார்
தூய ஏக பலியாய்
4
வெற்றி சின்ன சிலுவையே
இலை மலர் கனியில்
ஒப்புயர்வு அற்றாய் நீயே
மேலாம் தரு பாரினில்
மீட்பின் சின்னம் ஆனாய் மீட்பர்
தொங்கி மாண்டனர் உன்னில்
5
பிதா சுதன் ஆவியான
தூயராம் திரியேகரே
இன்றும் என்றும் சதாகாலம்
மாட்சி ஸ்தோத்ரம் ஏற்பீரே
மாட்சி ஸ்தோத்ரம் நித்திய காலம்
உன்னதத்தில் உமக்கே