மாட்சி மிகும் மோட்ச நகர் / Maatchi Migum Motcha Nagar / Matchi Mikum Motcha Nagar
மாட்சி மிகும் மோட்ச நகர் / Maatchi Migum Motcha Nagar / Matchi Mikum Motcha Nagar
1
மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் அந்த
மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்
2
பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே அங்கு
பாடுவோரும் ஆடுவோரும் கோடாக் கோடியே
3
முத்து மயமாயிலங்கும் பட்டணமது நமது
முன்னோரெல்லாம் போயிருக்கும் பட்டணமது
4
ஜீவநதி பாயுகின்ற பட்டணமது நிதம்
சித்திரமுடனிலங்கும் பட்டணமது
5
நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது நமது
நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது
6 சாவு துக்கமேயில்லாத பட்டணமது நிதம்
சங்கீதமுடனிலங்கும் பட்டணமது
மாட்சி மிகும் மோட்ச நகர் / Maatchi Migum Motcha Nagar / Matchi Mikum Motcha Nagar | D. G. S. Dhinakaran
மாட்சி மிகும் மோட்ச நகர் / Maatchi Migum Motcha Nagar / Matchi Mikum Motcha Nagar