Tamil Christian Songs starting with ப

பரலோகில் வாசம் செய்யும் / Paralogil Vaasam Seiyum / Paralogil Vaasam Seiyum

ஆஹா ஹா ஹா
ஹ்ம் ம் ம் ம்
ஆஹா ஹா ஹா
ஹ்ம் ம் ம் ம்

பரலோகில் வாசம் செய்யும்
பரலோகில் வாசம் செய்யும்
பரிசுத்த தெய்வம் நீரே

பணிகின்றோம் தொழுகின்றோம்
பாதம் அமர்கின்றோம்
பணிகின்றோம் தொழுகின்றோம்
பாதம் அமர்கின்றோம்

1
மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமா போல்
மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமா போல்

என் உள்ளமும் என் ஆத்மாவும்
உம்மைத் தான் வாஞ்சிக்குதே
என் உள்ளமும் என் ஆத்மாவும்
உம்மைத் தான் வாஞ்சிக்குதே

பரலோகில் வாசம் செய்யும்
பரலோகில் வாசம் செய்யும்

2
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் பரிசுத்தரே
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் பரிசுத்தரே

பாரெங்கிலும் உமையன்றியே
பரிசுத்தர் வேறில்லையே
பாரெங்கிலும் உமையன்றியே
பரிசுத்தர் வேறில்லையே

பரலோகில் வாசம் செய்யும்
பரலோகில் வாசம் செய்யும்

3
என் நேசரே என் அழகே
என் நினைவெல்லாம் நிறைந்தவரே
என் நேசரே என் அழகே
என் நினைவெல்லாம் நிறைந்தவரே

தேடி வந்தேன் உம் சமூகமதை
உம்மையே தரிசிக்கவே
தேடி வந்தேன் உம் சமூகமதை
உமை தினம் தரிசிக்கவே

துதிகளில் வாசம் செய்யும்
துதிகளில் வாசம் செய்யும்
தூயாதி தூயர் நீரே

துதிக்கின்றோம் தொழுகின்றோம்
துதித்து மகிழ்கின்றோம்
துதிக்கின்றோம் தொழுகின்றோம்
துதித்து மகிழ்கின்றோம்

பரலோகில் வாசம் செய்யும் / Paralogil Vaasam Seiyum / Paralogil Vaasam Seiyum | Mahen

Don`t copy text!