Tamil Christian Songs starting with பெ

பெந்தேகொஸ்தின் ஆவியே / Pendhegosthin Aaviye / Penthegosthin Aaviye / Pendhekosthin Aaviye / Penthekosthin Aaviye / Pendhecosthin Aaviye / Penthecosthin Aaviye

1         
பெந்தேகொஸ்தின் ஆவியே
உம்மால் போதிக்கப்பட்டே
கேட்போம் உன்னத ஈவே
தூய மெய்யன்பே

2        
அன்பு யாவும் சகிக்கும்
தீதெண்ணாது சாந்தமும்
அது வெல்லும் சாவையும்
அன்பை ஈயுமேன்

3        
போதனையும் ஓய்ந்திடும்
பூரண அறிவிலும்
அன்பே என்றும் நிலைக்கும்
அன்பை ஈயுமேன்

4        
காட்சியால் விஸ்வாசமும்
பூரிப்பால் நம்பிக்கையும்
ஓயும் என்றும் ஒளிரும்
அன்பை ஈயுமேன்

5        
அன்பு விசுவாசமும்
நம்பிக்கை இம்மூன்றிலும்
ஒப்பற்ற மேலானதும்
அன்பை ஈயுமேன்

6        
தூய நேச ஆவியே
உம்மைப் போற்றும் தாசர்க்கே
எங்கள் பேரில் அமர்ந்தே
அன்பை ஈயுமேன்

Don`t copy text!