Tamil Christian Songs starting with பெ

பெலத்தினாலும் அல்ல / Belaththinaalum Alla / Belathinaalum Alla

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

1
ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே
உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே

2
சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே
சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே

3
ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்குமே
வனாந்திரத்தில் தேவர் உண்ணும் மன்னா நமக்கு கிடைக்குமே

4
யோர்தான் நதியில் குளித்தே குஷ்டரோகம் சொஸ்தம் ஆகிடுமே
உமிழ் நீரின் சேற்றினாலே கண்கள் பார்வை அடைந்திடுமே

ஆர்ப்பரித்தே எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்திடுமே
கை உயர்த்த எதிரிகளை யுத்த சேனை மேற்கொள்ளுமே

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

தேவ ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

பெலத்தினாலும் அல்ல / Belaththinaalum Alla / Belathinaalum Alla | Santhosh Jeyakaran | Joshua Emmanuel | Enoch Joshua

Don`t copy text!