நீர் தந்தீர் எனக்காய் / Neer Thandheer Enakkaai / Neer Thantheer Enakkaai / Neer Thandheer Enakkai / Neer Thantheer Enakkai
நீர் தந்தீர் எனக்காய் / Neer Thandheer Enakkaai / Neer Thantheer Enakkaai / Neer Thandheer Enakkai / Neer Thantheer Enakkai
1
நீர் தந்தீர் எனக்காய்
உம் உயிர் ரத்தமும்
நான் மீட்கப்பட்டோனாய்
சாகாமல் வாழவும்
நீர் தந்தீர் எனக்காய்
நான் யாது தந்திட்டேன்
2
பின்னிட்டீர் ஆண்டுகள்
வேதனை துக்கமும்
நான் நித்திய நித்தியமாய்
பேரின்பம் பெறவும்
பின்னிட்டீர் எனக்காய்
நான் யாது பின்னிட்டேன்
3
பிதாவின் விண் வீடும்
ஆசனமும் விட்டீர்
பார் இருள் காட்டிலும்
தனித்தே அலைந்தீர்
நீர் விட்டீர் எனக்காய்
நான் யாதெது விட்டேன்
4
சொல்லொண்ணா வேதனை
அகோர கஸ்தியும்
சகித்தீர் எனக்காய்
நரகம் தப்பவும்
சகித்தீர் எனக்காய்
நான் யாது சகித்தேன்
5
கொணர்ந்தீர் எனக்காய்
விண் வீட்டினின்று
மீட்பு சமூலமாய்
மன்னிப்பு மா அன்பு
கொணர்ந்தீர் எனக்காய்
நான் யாது கொணர்ந்தேன்
6
என் ஜீவன் தருவேன்
பற்றாசை ஒழித்து
உமக்காய் ஜீவிப்பேன்
யாவுமே சகித்து
நீர் தந்தீர் உம்மையே
நான் தந்தேன் என்னையே