Tamil Christian Songs starting with த

தவிக்கிறேன் நான் தவிக்கிறேன் / Thavikiren Naan Thavikiren / Thavikkiren Naan Thavikkiren

ஒரு முறை உம்மை பார்க்க வேண்டுமே
என் பாரத்தை உம்மிடம் சொல்ல வேண்டுமே

உம்மை விட்டு செல்கிறேன்
உம் பாதை விட்டு நடக்கிறேன்
உம்மை விட்டு செல்கிறேன்
உம் பாதை விட்டு நடக்கிறேன்

ஏற்று கொள்ளும் ஏற்று கொள்ளும்
எந்தன் ஏசுவே

தவிக்கிறேன் நான் தவிக்கிறேன்
தவிக்கிறேன் நான் தவிக்கிறேன்

கண்ணீரில் நான் மூழ்கிறேன்
கவலையில் நான் வீழ்கிறேன்
கண்ணீரில் நான் மூழ்கிறேன்
கவலையில் நான் வீழ்கிறேன்

மாற்றுமே என் வாழ்க்கையை
எந்தன் ஏசுவே

1
தனிமையில் நான் இருந்த போது
ஓர் அன்பிற்க்காக ஏங்கினேன்
கவலையில் நான் தவித்த போது
அதை தேற்ற ஒருவரை நாடினேன்
என்னை வெறுத்து சென்றனர்
என்னை தூக்கி போட்டனர்
பாவியான என்னையும்
மாற்றிடும் என் ஏசுவே
ஏற்று கொள்ளும் ஏற்று கொள்ளும்
எந்தன் ஏசுவே

தவிக்கிறேன் நான் தவிக்கிறேன்
தவிக்கிறேன் நான் தவிக்கிறேன்

கண்ணீரில் நான் மூழ்கிறேன்
கவலையில் நான் வீழ்கிறேன்
கண்ணீரில் நான் மூழ்கிறேன்
கவலையில் நான் வீழ்கிறேன்

மாற்றுமே என் வாழ்க்கையை
எந்தன் ஏசுவே

2
பாரமான சிலுவையை-அதை
பலமுறை தூக்க செய்தேனே
சிலுவையில் நீர் அடிக்கப்பட்டு-அந்த
ரத்தத்தை நான் காண்கிறேன்
எனக்காக மரித்தார்
எனக்காக உயிர்த்தீர்
உமக்காக வாழ்வேனே
இனி உம்மை விட்டு பிரியேனே
மன்னியும் என்னை மன்னியும்
எந்தன் ஏசுவே

தவிக்கிறேன் நான் தவிக்கிறேன்
தவிக்கிறேன் நான் தவிக்கிறேன்

கண்ணீரில் நான் மூழ்கிறேன்
கவலையில் நான் வீழ்கிறேன்
கண்ணீரில் நான் மூழ்கிறேன்
கவலையில் நான் வீழ்கிறேன்

மாற்றுமே என் வாழ்க்கையை
எந்தன் ஏசுவே

Don`t copy text!