Tamil Christian Songs starting with தெ

தெய்வ கிருபையைத் தேட / Deiva Kirubaiyai Theda / Theiva Kirubaiyai Theda

(1ஆம் பாகம்)

1         
தெய்வ கிருபையைத் தேட
நீ போராடிக்கொண்டிரு
ஆவி பாரமின்றி ஏற
நன்றாய் ஜாக்கிரதைப் படு

2  
வாசல் மிகவும் இடுக்கம்
தாழ்மையாகி உட்படு
ஜீவ வழியோ நெருக்கம்
லோக நேசத்தை விடு

3  
சேவகத்தில் பின் வாங்காமல்
ராஜ்ஜியத்துக்குட்படு
பேய் எதிர்த்தால் தளராமல்
நின்று ஏகிக்கொண்டிரு

4  
வேண்டுதலினால் போராடி
ஆண்டவரின் தயவு
காணுமட்டுக்கும் மன்றாடி
கூப்பிட்டுக் கொண்டேயிரு

5  
கர்த்தர் உன்னைத் தயவோடே
ஏற்றுக்கொண்டபிறகு
பாவம் உன்னிலே வேரோடே
செத்ததென்றெண்ணாதிரு

6  
ஜீவனுள்ள நாள்மட்டாக
மோசங்கள் இருக்குமே
திகிலும் பயமுமாக
உன் ரட்சிப்பைக் காப்பாயே

7  
நீ முடியைப் பெற்றிருந்தால்
கெட்டியாய்ப் பிடித்திரு
பின்னடைந்து போய் விழுந்தால்
மோசம் மா பெரியது

8  
மாய்கையை நோக்காதே விட்டு
ஞான ஆயுதங்களை
ராவும் பகலும் பிடித்து
நிர்விசாரத்தைப் பகை

(2ஆம் பாகம்)


இதை நாம் நினைப்போமாக
ஆ நற்சேவகரைப்போல்
பந்தயம் பெறுமட்டாக
ஏகிப்போவோம் வாருங்கள்


லோகம் பேயின் வசமாமே
சோதோம் வேகும் அல்லவோ
தப்பிப்போக நேரமாமே
தீவிரிக்க வேண்டாமோ


தப்பத்தக்கதாக ஓடு
ஆத்துமாவே தீவிரி
பாரத்தை இறக்கிப் போடு
தெய்வச் சொல்லைக் கவனி


அக்ரம சோதோமை விட்டு
அதன் செக்கையை வெறு
தப்பிப்போகத் தீவிரித்து
நல்லொதுக்குக்குட்படு


நீ பின்னானதைப நாடாமல்
முன்னிருப்பதைப் பிடி
இச்சை வைத்தழுக்காகாமல்
தெய்வ சிந்தையைத் தரி


வென்றவரை மோட்சத்துக்கு
சேர்த்துயர்த்துவதற்கு
வரும் மணவாளனுக்கு
வாஞ்சையாகக் காத்திரு


ஓடி அவரைச் சந்தித்து
ஜீவனே முள் காட்டைப்போல்
காணும் இப்புவியை விட்டு
என்னைச்சேரும் என்றுசொல்

Don`t copy text!