Tamil Christian Songs starting with தி

திருச்சபை காத்திருக்க / Thiruchchabai Kaaththirukka / Thiruchabai Kaathirukka / Thiruchchabai Kaththirukka / Thiruchabai Kathirukka


திருச்சபை காத்திருக்க
எந்நாள் நாதா வருவீர்
எந்நாள் துக்க ரா முடிய
பகல் விடியச் செய்வீர்
நெல் விளைந்து வாடிப்போக
அறுப்போரும் குறைந்தார்
சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள
கிறிஸ்து வீணாயோ மாண்டார்


சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி
கோடாகோடி கேளாரே
யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி
நாதா வார்த்தை ஈயுமே
வார்த்தை ஈயும் சுவிசேஷ
தொனி எங்கும் ஒலித்தும்
எல்லாத் தேசத்தாரும் திவ்விய
மீட்பைக் கேட்க செய்திடும்


நீர் தெரிந்தோர் ஈறுகாலம்
ஒன்றாய் சேர்க்கப்படுவார்
சாத்தான் கட்டப்பட்டுப் பாவம்
மாய கிறிஸ்து ஆளுவார்
பசி தாகம் நோவு சாவும்
கண்ணீர் யாவும் நீங்கவே
திருச்சபை காத்திருக்கும்
இயேசு ஸ்வாமி வாருமே

Don`t copy text!