சபையாரே கூடிப்பாடி / Sabaiyaarae Kodippaadi / Sabaiyarae Kodippaadi
சபையாரே கூடிப்பாடி / Sabaiyaarae Kodippaadi / Sabaiyarae Kodippaadi
1
சபையாரே கூடிப்பாடி
கர்த்தரை நாம் போற்றுவோம்
பூரிப்பாய் மகிழ் கொண்டாடி
களிகூரக் கடவோம்
இந்நாள் கிறிஸ்து சாவை வென்று
எழுந்தார் ஆர்ப்பரிப்போம்
2
சிலுவையில் ஜீவன் விட்டு
பின்பு கல்லறையிலே
தாழ்மையாக வைக்கப்பட்டு
மூன்றாம் நாள் எழுந்தாரே
லோக மீட்பர் வல்லநாதர்
வெற்றிவேந்தர் ஆனாரே
3
மீட்பரே நீர் மாட்சியாக
சாவின் கூரை முறித்தீர்
நாங்கள் நீதிமான்களாக
பிதாமுன்னே நிற்கிறீர்
என்றென்றைக்கும் விண் மண்ணோரும்
உம்மை வாழ்த்தப் பெறுவீர்
4
சாவின் ஜெயம் ஜெயமல்ல
தேகம் மண்ணாய்ப் போயினும்
எல்லாம் கீழ்ப்படுத்த வல்ல
கர்த்தராலே மீளவும்
ஜீவன் பெற்று மேன்மை கொண்டு
மறு ரூபமாகிடும்
