சிலுவை தாங்கு மீட்பர் பின் / Siluvai Thaangu Meetpar Pin / Siluvai Thangu Meetpar Pin
சிலுவை தாங்கு மீட்பர் பின் / Siluvai Thaangu Meetpar Pin / Siluvai Thangu Meetpar Pin
1
சிலுவை தாங்கு மீட்பர் பின்
அவரின் சீஷனாகவே
வெறுப்பாய் உன்னை லோகத்தைப்
பின் செல்வாய் தாழ்மையாகவே
2
சிலுவை தாங்கு பாரத்தால்
கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்
விண் பலம் உன்னைத் தாங்கிடும்
வல்லமை வீரம் பெறுவாய்
3
சிலுவை தாங்கு மேட்டிமை
கொள்ளாய் எந்நிந்தை எண்ணிடாய்
நீ பாவம் சாவை மேற்கொள்ள
உன் மீட்பர் மாண்டார் ஈனமாய்
4
சிலுவை தாங்கி நின்றிடு
தீரமாய் மோசம் யாவிலும்
சிலுவை சேர்க்கும் மோட்சத்தில்
சாவின் மேல் வெற்றி ஈந்திடும்
5
சிலுவை தாங்கிக் கிறிஸ்துவை
பின் செல்வாய் ஆயுள் முற்றுமே
மகிமை கிரீடம் சூடுவாய்
சிலுவை தாங்கின் மட்டுமே
6
திரியேகரான மா கர்த்தா
என்றென்றும் போற்றப்படுவீர்
மேலோக நித்திய வாழ்வுக்கே
அடியாரை நடத்துவீர்