Tamil Christian Songs starting with கோ

கோர சிலுவையில் | Kora Siluvaiyil

கோர சிலுவையில் என்னுயிர் காக்க
தன்னுயிர் சிலுவையில் விட்டாரே இயேசு
கோர சிலுவையில் என்னுயிர் காக்க
தன்னுயிர் சிலுவையில் விட்டாரே இயேசு

போர் சேவகர்களினால் முட்கிரீடம் தானே
இயேசுவின் தலையில் சூட்டப்பட்டதுவே

கோர சிலுவையில் என்னுயிர் காக்க
தன்னுயிர் சிலுவையில் விட்டாரே இயேசு

1
வாரினால் இயேசுவை அடித்திடவே
இயேசுவின் சரீரம் கிழிந்ததுவே
ஈட்டியால் விலாவில் குத்திடவே
இரத்தமும் வியர்வையும் வெளிவந்ததுவே

இரத்தமும் வியர்வையும் வெளிவந்ததுவே

கோர சிலுவையில் என்னுயிர் காக்க
தன்னுயிர் சிலுவையில் விட்டாரே இயேசு

2
இயேசுவின் இரண்டு கைகளிலும்
இரண்டு ஆணிகள் அடிக்கப்பட்டதுவே
இயேசுவின் இரு கால்களை இணைத்து
ஒரே ஆணியால் அடிக்கப்பட்டதுவே

ஒரே ஆணியால் அடிக்கப்பட்டதுவே

கோர சிலுவையில் என்னுயிர் காக்க
தன்னுயிர் சிலுவையில் விட்டாரே இயேசு

3.
இயேசுவின் இரத்தமும் வியர்வையும்
ஒன்றாய் கலந்து தரை விழுந்ததுவே
எனக்காக தானே பாடுகள் நிந்தைகள்
கோர சிலுவையில் தாங்கினார் இயேசு

கோர சிலுவையில் தாங்கினார் இயேசு

கோர சிலுவையில் என்னுயிர் காக்க
தன்னுயிர் சிலுவையில் விட்டாரே இயேசு

போர் சேவகர்களினால் முட்கிரீடம் தானே
இயேசுவின் தலையில் சூட்டப்பட்டதுவே

கோர சிலுவையில் என்னுயிர் காக்க
தன்னுயிர் சிலுவையில் விட்டாரே இயேசு

கோர சிலுவையில் | Kora Siluvaiyil | Jimreeves Samuel | Rajan. G

Don`t copy text!