கொந்தளிக்கும் லோக வாழ்வில் / Kondhalikkum Loga Vaalvil / Kondhalikkum Loga Vaazhvil
கொந்தளிக்கும் லோக வாழ்வில் / Kondhalikkum Loga Vaalvil / Kondhalikkum Loga Vaazhvil
1
கொந்தளிக்கும் லோக வாழ்வில்
கேட்போம் மீட்பர் சத்தத்தை
நித்தம் நித்தம் மா அன்போடு
‘நேசா! பின் செல்வாய் என்னை’
2
பூர்வ சீஷன் அந்திரேயா
கேட்டான் அந்த சத்தமே
வீடு வேலை இனம் யாவும்
விட்டான் அவர்க்காகவே
3
மண் பொன் மாய லோக வாழ்வை
விட்டு நீங்க அழைப்பார்
பற்று பாசம் யாவும் தள்ளி
‘என்னை நேசிப்பாய்’ என்பார்
4
இன்பம் துன்பம் கஷ்டம் சோர்வு
வேலை தொல்லை ஓய்விலும்
யாவின் மேலாய்த் தம்மைச் சார
நம்மை அழைப்பார் இன்றும்
5
மீட்பரே உம் சத்தம் கேட்டு
கீழ்ப்படிய அருளும்
முற்றும் உம்மில் அன்பு வைத்து
என்றும் சேவிக்கச் செய்யும்