Tamil Christian Songs starting with கி

கிறிஸ்துவின் வீரரே / Kiristhuvin Veerare / Kiristhuvin Veerarae

1         
கிறிஸ்துவின் வீரரே
சர்வாயுதத்தையும்
கர்த்தர் ஈயும் பலத்தாலே
எழுந்தணிந்திடும்

2        
அத்திவ்விய பலத்தால்
வல்லமை அடைந்தார்
சேனைக் கர்த்தாவை நம்பினால்
மெய் வீரர் ஆகுவார்

3        
அவர் மா பலத்தால்
ஸ்திரமாய் நின்றுமே
சர்வாயுதத்தைக் கர்த்தரால்
தரித்துக் கொள்ளுமே

4        
இருளின் சக்தியை
மிதித்து வெல்லவும்
பலத்தின் மேலும் பலத்தை
அடைந்து போர் செய்யும்

5        
போர் ஓய்ந்து வேலையை
முடித்த பின்னர் நீர்
கிறிஸ்துவால் வாடா கிரீடத்தை
அணிந்து கொள்ளுவீர்

6        
பிதாவும் ஆவியும்
உம்மோடு இயேசுவே
திரியேக தெய்வமாய் என்றும்
மகிமை ஏற்பாரே

Don`t copy text!