Tamil Christian Songs starting with கி

கிறிஸ்துவின் வீரர் நாம் / Kiristhuvin Veerar Naam

1   
கிறிஸ்துவின் வீரர் நாம்
ரத்தத்தால் மீட்டாராம்
இப்போது சேனை சேர்ந்து நாம்
அவர்க்காய்ப் போர் செய்வோம்
அபாயத்தினூடும்
மகிழ்ந்து பாடுவோம்
தம் வீரரை நடத்துவோர்
நெஞ்சில் திடன் ஈவார்

கிறிஸ்துவின் வீரர் நாம்
புகழ்ந்து போற்றுவோம்
நம் மேன்மையுள்ள ராஜனை
எக்காலும் சேவிப்போம்

2   
கிறிஸ்துவின் வீரர் நாம்
அவரின் பேர் நாமம்
சிலுவை மேலாய் நின்றதாம்
மாண்போடு தாங்குவோம்
நஷ்டமும் லாபமே
எந்நோவும் இன்பமே,
அவரின் நாமம் ஏற்றிடும்
கிறிஸ்துவின் வீரர்க்கே

கிறிஸ்துவின் வீரர் நாம்
புகழ்ந்து போற்றுவோம்
நம் மேன்மையுள்ள ராஜனை
எக்காலும் சேவிப்போம்

3   
கிறிஸ்துவின் வீரராய்
அவர்க்காய் சகிப்போம்
வேதனை நிந்தை வெட்கமும்
அவரோடாளுவோம்
காலம் சமீபமே,
ஓங்கிப் போர் செய்வோமே
மாண்பாக கிரீடம் சூடுவோம்
கிறிஸ்துவின் வீரரே

கிறிஸ்துவின் வீரர் நாம்
புகழ்ந்து போற்றுவோம்
நம் மேன்மையுள்ள ராஜனை
எக்காலும் சேவிப்போம்

Don`t copy text!