Tamil Christian Songs starting with உ

உம் உள்ளங்கையில் | Um Ullankaiyil / Um Ullangaiyil

உம் உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர்
ஒரு போதும் என்னை நீர் மறப்பதில்லை
என் தகப்பன் தாய் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் நீர் என்னை சேர்த்து கொள்வீர்

உம் உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர்
ஒரு போதும் என்னை நீர் மறப்பதில்லை
என் தகப்பன் தாய் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் நீர் என்னை சேர்த்து கொள்வீர்

என் கால்கள் சருக்கும் நேரமெல்லாம் கிருபை என்னை தேற்றுமே
உள்ளத்தில் பெருகும் விசாரங்கள் உம் ஆறுதல் என்னை தேற்றுமே

என்னை தேற்றுமே என்னை ஆற்றுமே
என்னை தேற்றுமே என்னை ஆற்றுமே

உம் உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர்
ஒரு போதும் என்னை நீர் மறப்பதில்லை

என் இரட்சிப்பும் நீர் நான் பயப்படாமல் என்றும் நம்பிக்கையாய் இருப்பேன்
கர்த்தாவே நீர் என் பெலனும் என் கீதமும் ஆனவரே
என் இரட்சிப்பும் நீர் நான் பயப்படாமல் என்றும் நம்பிக்கையாய் இருப்பேன்
கர்த்தாவே நீர் என் பெலனும் என் கீதமும் ஆனவரே

என் இருதயத்தை அவர் ஸ்திரப்படுத்தி திட மனதாய் மாற்றிடுவார்
தாழ்ந்தவன் என்னை உயரத்தில் வைத்து இரட்சித்து உயர்த்திடுவார்

என்னை தேற்றுமே என்னை ஆற்றுமே
என்னை தேற்றுமே என்னை ஆற்றுமே

என்னை தேற்றுமே என்னை ஆற்றுமே

உம் உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர்
ஒரு போதும் என்னை நீர் மறப்பதில்லை
என் தகப்பன் தாய் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் நீர் என்னை சேர்த்து கொள்வீர்

உம் உள்ளங்கையில் | Um Ullankaiyil / Um Ullangaiyil | Fenicus Joel | John Rohith | Fenicus Joel

Don`t copy text!