Tamil Christian Songs starting with உ

உம்மை ஆராதனை செய்கிறேன் / Ummai Aaraadhanai Seigiren / Ummai Aaraathanai Seigiren / Ummai Aarathanai Seigiren

1
உம்மை ஆராதனை செய்கிறேன்
எந்தன் ஜீவனின் மீட்பரே
உம்மை ஆராதனை செய்கிறேன்
என்னை நேசிக்கும் நேசரே

மண்ணில் ஈன்ற தாயும் என்னை மறந்தாலும்
நீர் என்னை நினைக்கின்றீர்
உற்றார் உறவினரும் கை விரித்தாலும்
உம்கரம் கொடுக்கின்றீர்

உம்மை ஆராதனை செய்கிறேன்
எந்தன் ஜீவனின் மீட்பரே
உம்மை ஆராதனை செய்கிறேன்
என்னை நேசிக்கும் நேசரே

1
காலங்கள் கரையும் காட்சிகள் மறையும்
நீர் சொன்ன வாக்கோ என்றும் மாறாதே
உதவாத கல்லாய் இருந்ததும் போதும்
மூலைக்கல்லாக மாற்றிட வாரும்

காலங்கள் கரையும் காட்சிகள் மறையும்
நீர் சொன்ன வாக்கோ என்றும் மாறாதே
உதவாத கல்லாய் இருந்ததும் போதும்
மூலைக்கல்லாக மாற்றிட வாரும்

ரட்சகர் நீரன்றோ ரட்சிப்பும் எனக்கன்றோ
என்னை நெருங்கி வந்தீரே
வந்து தெரிந்து கொண்டீரே

உம்மை ஆராதனை செய்கிறேன்
எந்தன் ஜீவனின் மீட்பரே

2
நாட்கள் நகரும் தீராத பிணியால்
உம் சித்தமிருந்தால் உருகிடும் பனியாய்
கடன்களின் பாரம் நெருக்கின்ற நேரம்
உம் தயவிருந்தால் அது கரைந்தோடும்

நாட்கள் நகரும் தீராத பிணியால்
உம் சித்தமிருந்தால் உருகிடும் பனியாய்
கடன்களின் பாரம் நெருக்கின்ற நேரம்
உம் தயவிருந்தால் அது கரைந்தோடும்

கேட்டால் தருகின்றீர்
தட்டினால் திறக்கின்றீர்
உந்தன் பெலனோ எனக்குள்ளே
இனி கலக்கம் எனக்கில்லே

உம்மை ஆராதனை செய்கிறேன்
எந்தன் ஜீவனின் மீட்பரே
உம்மை ஆராதனை செய்கிறேன்
என்னை நேசிக்கும் நேசரே

மண்ணில் ஈன்ற தாயும் என்னை மறந்தாலும்
நீர் என்னை நினைக்கின்றீர்
உற்றார் உறவினரும் கை விரித்தாலும்
உம்கரம் கொடுக்கின்றீர்

உம்மை ஆராதனை செய்கிறேன்
எந்தன் ஜீவனின் மீட்பரே
உம்மை ஆராதனை செய்கிறேன்
என்னை நேசிக்கும் நேசரே

Don`t copy text!