Tamil Christian Songs starting with இ

இயேசு நாதா காக்கிறீர் / Yesu Naadhaa Kaakkireer / Yesu Naathaa Kaakkireer / Yesu Naadhaa Kaakkireer / Yesu Naathaa Kaakkireer

1           
இயேசு நாதா காக்கிறீர்
இளைப்பாறச் செய்கிறீர்
மோசம் நேரிடாமலும்
பாதம் இடறாமலும்
என்னைத் தாங்கி நிற்கிறீர்
நேச நாதா காக்கிறீர்

2   
வாரிபோன்ற லோகத்தில்
யாத்திரை செய்து போகையில்
சூறைக் காற்று மோதினும்
ஆழி கோஷ்டமாயினும்
அமைதல் உண்டாக்குவீர்
நேச நாதா காக்கிறீர்

3   
சற்றுத் தூரம் செல்லவே
மோட்ச கரை தோன்றுமே
துன்பம் நீங்கி வாழுவேன்
இன்பம் பெற்று போற்றுவேன்
அதுமட்டும் தாங்குவீர்
நேச நாதா காக்கிறீர்

Don`t copy text!