ஆதரவே அடைக்கலமே | Aadharavae Adaikalamae / Aadharavae Adaikkalamae
ஆதரவே அடைக்கலமே | Aadharavae Adaikalamae / Aadharavae Adaikkalamae
ஆதரவே அடைக்கலமே
புகலிடமே என் உறைவிடமே என்
ஆதரவே அடைக்கலமே
புகலிடமே என் உறைவிடமே
உம்மைத்தான் நம்பியிருக்கின்றேன் நான்
உம்மைத்தான் நம்பியிருக்கின்றேன்
உம்மைத்தான் நம்பியிருக்கின்றேன் நான்
உம்மைத்தான் நம்பியிருக்கின்றேன்
ஆதரவே அடைக்கலமே
புகலிடமே என் உறைவிடமே
1
நான் பிறந்த நாள் முதலாய்
இந்நாள் வரைக்கும் என்னை
ஆதரித்த தெய்வம் நீரய்யா
நான் பிறந்த நாள் முதலாய்
இந்நாள் வரைக்கும் என்னை
ஆதரித்த தெய்வம் நீரய்யா
எத்தனையோ சோதனைகள்
எத்தனையோ வேதனைகள்
எத்தனையோ சோதனைகள்
எத்தனையோ வேதனைகள்
நிர்மூலமாகாமலே காத்துக்கொண்டீரே
நிர்மூலமாகாமலே காத்துக்கொண்டீரே
ஆதரவே அடைக்கலமே
புகலிடமே என் உறைவிடமே என்
ஆதரவே அடைக்கலமே
புகலிடமே என் உறைவிடமே
2
சத்துருக்கள் சூழ்ந்து என்னை
நெருக்கிடும் நேரத்திலே
தீவிரமாய் ஓடி வந்தீரே
சத்துருக்கள் சூழ்ந்து என்னை
நெருக்கிடும் நேரத்திலே
தீவிரமாய் ஓடி வந்தீரே
காயங்கள் ஆற்றினீரே
கண்ணீரை துடைத்தீரே
காயங்கள் ஆற்றினீரே
கண்ணீரை துடைத்தீரே
தோள் மீது சுமந்து சென்றீரே
தோள் மீது சுமந்து சென்றீரே
ஆதரவே அடைக்கலமே
புகலிடமே என் உறைவிடமே என்
ஆதரவே அடைக்கலமே
புகலிடமே என் உறைவிடமே
3
நிந்தனைகள் அவமானம்
சூழ்ந்திடும் நேரத்திலே
மகிமையால் மூடினீரையா
நிந்தனைகள் அவமானம்
சூழ்ந்திடும் நேரத்திலே
மகிமையால் மூடினீரையா
வெட்கப்பட்ட தேசத்திலே
புகழ்ச்சியும் கீர்த்தியுமாய்
வெட்கப்பட்ட தேசத்திலே
புகழ்ச்சியும் கீர்த்தியுமாய்
கிருபையால் உயர்த்தினீரையா
கிருபையால் உயர்த்தினீரையா
ஆதரவே அடைக்கலமே
புகலிடமே என் உறைவிடமே என்
ஆதரவே அடைக்கலமே
புகலிடமே என் உறைவிடமே
உம்மைத்தான் நம்பியிருக்கின்றேன் நான்
உம்மைத்தான் நம்பியிருக்கின்றேன்
உம்மைத்தான் நம்பியிருக்கின்றேன் நான்
உம்மைத்தான் நம்பியிருக்கின்றேன்
ஆதரவே அடைக்கலமே | Aadharavae Adaikalamae / Aadharavae Adaikkalamae | L. Lucas Sekar | Alwyn | L. Lucas Sekar / Bethel Sharon Church, Sudracholapuram, Thiruverkadu, Chennai, Tamil Nadu, India