அற்ப வாழ்வை வாஞ்சியாமல் / Arpa Vaalvai Vaanjiyaamal / Arpa Vaazhvai Vaanjiyaamal
அற்ப வாழ்வை வாஞ்சியாமல் / Arpa Vaalvai Vaanjiyaamal / Arpa Vaazhvai Vaanjiyaamal
1
அற்ப வாழ்வை வாஞ்சியாமல்
இன்பம் செல்வம் பின்பற்றாமல்
தேவ நேசத்தை ஓயாமல்
நாடுவாய் நாடுவாய்
2
விரும்பாதே பேர் ப்ரஸ்தாபம்
லோகமகிமை ப்ரதாபம்
ஆத்மவாழ்வின் நித்தியலாபம்
நாடுவாய் நாடுவாய்
3
நாடுவாய் தேவாசீர்வாதம்
கர்த்தர்ஈயும் சற்பிரசாதம்
பாவந்தீரத் திருப்பாதம்
நாடுவாய் நாடுவாய்
4
மீட்பர்போல் சுத்தாங்கமாக
தாழ்மையோடு சாந்தமாகத்
தொண்டுசெய்ய ஆவலாக
நாடுவாய் நாடுவாய்
5
பிறர் யேசுவண்டை சேர
அவராலே கடைத்தேற
தேவசித்தம் நிறைவேற
நாடுவாய் நாடுவாய்
6
அருள்நாதர் அரசாளும்
காலம் வந்து சர்வத்தாளும்
மீட்பைக் காணவும் எந்நாளும்
நாடுவாய் நாடுவாய்