Tamil Christian Songs starting with U

உந்தன் சொந்தமாக்கினீர் / Undhan Sondhamaakkineer / Unthan Sonthamaakkineer / Undhan Sondhamakkineer / Unthan Sonthamakkineer

1   
உந்தன் சொந்தமாக்கினீர்
அடியேனை நோக்குவீர்
பாதுகாரும் இயேசுவே
என்றும் தீங்கில்லாமலே

2   
நான் உம் சொந்தம் லோகத்தில்
மோட்ச யாத்திரை செய்கையில்
ஜீவன் சத்தியம் வழியும்
நீரே ரட்சித்தாண்டிடும்

3   
நான் உம் சொந்தம் ரட்சியும்
மட்டில்லாத பாக்கியமும்
அருள் நாதா நல்கினீர்
இன்னமும் காப்பாற்றுவீர்

4   
நான் உம் சொந்தம் நித்தமாய்
தாசனை நீர் சுகமாய்
தங்கச் செய்து மேய்ப்பரே
காத்தும் மேய்த்தும் வாருமே

5   
நான் உம் சொந்தம் தேவரீர்
வழி காட்டிப் போஷிப்பீர்
பாவம் நீங்கக் கழுவும்
ஆயுள் முற்றும் நடத்தும்

Don`t copy text!