Tamil Christian Songs starting with M

மயங்கும் தாசனை / Mayangum Dhaasanai / Mayangum Thasanai / Mayangum Dhasanai / Mayangum Thasanai

1         
மயங்கும் தாசனை
தேவா நீர் நடத்தும்
என் பாதை காட்டியாய்
சகாயம் புரியும்

2        
நீர் காட்டும் பாதைதான்
எப்போதும் நல்லதே
சுற்று நேர் ஆயினும்
விண் வீடு சேர்க்குமே

3        
கபோதி நான் ஐயா
முன் நிற்பதறியேன்
நீர் என்னை நடத்தும்
நான் பின்னே செல்லுவேன்

4        
உம் சித்தம்போல நீர்
என் பாத்ரம் எடுத்தும்
சந்தோஷம் சஞ்சலம்
ஏதேனும் நிரப்பும்

5        
வியாதி சுகமோ
இஷ்டர் பகைஞரோ
வறுமை செல்வமோ
சிறிதோ பெரிதோ

6        
என் பங்கேதாயினும்
என் இஷ்டம் எதிலும்
வேண்டாம் என் தேவனே
நீர் ஆண்டு நடத்தும்

மயங்கும் தாசனை / Mayangum Dhaasanai / Mayangum Thasanai / Mayangum Dhasanai / Mayangum Thasanai

மயங்கும் தாசனை / Mayangum Dhaasanai / Mayangum Thasanai / Mayangum Dhasanai / Mayangum Thasanai

Don`t copy text!