Tamil Christian Songs starting with L

லௌகீக இன்பம் மேன்மையும் / Lowgeega Inbam Maenmaiyum / Lowkeeka Inbam Maenmaiyum

1   
லௌகீக இன்பம் மேன்மையும்
இப்பரதேசிக்கு வேண்டாம்
பரம நன்மை செல்வமும்
இங்கில்லை, யாவும் மாயையாம்
பொருளல்லாததை நாடேன்
நான் இயேசுவை சிநேகிப்பேன்

2   
லௌகீக வாழ்வு ஒழியும்
சரீரம் அழகற்றுப்போம்
நரர் கைவேலை அழியும்
இவ்வுலகமும் வெந்துபோம்
பொருளல்லாததை நாடேன்
நான் இயேசுவை சிநேகிப்பேன்

3   
ஆனாலும் இயேசு ராஜியம்
அழிந்து போகமாட்டாதே
மா நீதியாம் சிங்காசனம்
விழாமல் என்றும் நிற்குமே
பொருளல்லாததை நாடேன்
நான் இயேசுவை சிநேகிப்பேன்

4   
நான் இங்கே தங்கும் நாள் எல்லாம்
என் துன்பம் நீங்கமாட்டாதே
பரத்தில் சேர்ந்தபின் உண்டாம்
மெய்வாழ்வு மேன்மை பூரிப்பே
பொருளல்லாததை நாடேன்
நான் இயேசுவை சிநேகிப்பேன்

Don`t copy text!