Tamil Christian Songs starting with E

என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே / En Nejai Swaami Umakke / En Nejai Swami Umakke

1        
என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே
ஈவாய்ப் படைக்கிறேன்
நீர் இந்தக் காணிக்கையையே
கேட்டீர் என்றறிவேன்

2        
என் மகனே உன் நெஞ்சைத் தா
நீ இக்கடனைத் தீர்
வேறெங்கும் நீ சுகப்பட
மாட்டாயே என்கிறீர்

3        
அப்பா நீர் அதைத் தயவாய்
அங்கீகரிக்கவும்
நான் அதை உள்ளவண்ணமாய்
தந்தேன் அன்பாயிரும்

4        
மெய்தானே அது தூய்மையும்
நற்சீரு மற்றது
அழுக்கும் தீட்டும் மாய்கையும்
அதில் நிரம்பிற்று

5        
நான் உண்மையாய்க் குணப்பட
அதை நொறுக்குமேன்
இத் தயவை நீர் காண்பிக்க
பணிந்து கேட்கிறேன்

6        
ஆ என் கல் நெஞ்சை நீர் நன்றாய்
உருக்கி முழுவதும்
புலம்பலும் கண்ணீருமாய்
கரையப் பண்ணவும்

7        
நீர் என்னைக் கிறிஸ்தின் சாயலாய்
எல்லோரிடத்திலும்
மென்மேல் புறம்பும் உள்ளுமாய்
நற்சாந்தமாக்கவும்

8        
நீர் என்னைக் கிறிஸ்து மார்க்கத்தில்
மேற்பூச்சும் மாயமும்
இல்லாதோனாக்கி அவரில்
நல்லுண்மையாக்கவும்

9        
என் முழு நெஞ்சையும் அன்பாய்
நீர் ஸ்வாமீ என்றைக்கும்
அகமும் ஆலயமுமாய்
எடைத்துக் கொண்டிரும்

10      
நீர் அதை ஆளும் கர்த்தரே
அதால் நான் பாக்கியன்
நான் உலகத்தானல்லவே
நான் உம்முடையவன்

11      
போ லோகமே போ பாவமே
என் நெஞ்சை அடியேன்
எக்காலத்துக்கும் இயேசுவே
கொடுத்திருக்கிறேன்

Don`t copy text!