Tamil Christian Songs starting with E

எனக்குதவின மாமலை | Enakkudavina Maamalai

எனக்குதவின மாமலை நீரல்லவோ
உமக்கே நன்றி ஐயா
எனக்குதவின மாமலை நீரல்லவோ
உமக்கே நன்றி ஐயா

நீர் எல்ஷடாய் என்று நான் அறிவேன்
என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்
நீர் எல்ஷடாய் என்று நான் அறிவேன்
என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்

எனக்குதவின மாமலை நீரல்லவோ
உமக்கே நன்றி ஐயா
எனக்குதவின மாமலை நீரல்லவோ
உமக்கே நன்றி ஐயா

1
சிறைச்சாலை ஆனாலும் எரிகோக்கள் ஆனாலும்
துதியின் ஆயுதத்தை நாவில் வைத்தீர்
சிறைச்சாலை ஆனாலும் எரிகோக்கள் ஆனாலும்
துதியின் ஆயுதத்தை நாவில் வைத்தீர்

சாத்தானின் சேனைகள் அறுந்தோடச்செய்தீரே
வெற்றியின் பாதையில் சுதந்தரிக்கச்செய்தீரே

எல்ஷடாய் நீர்தானே எங்கள்
எல்ஷடாய் நீர்தானே

நீர் எல்ஷடாய் என்று நான் அறிவேன்
என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்
நீர் எல்ஷடாய் என்று நான் அறிவேன்
என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்

2
செங்கடல் ஆனாலும் யோர்தான் ஆனாலும்
தடைகளை தாண்டிட நீர் முன்செல்கின்றீர்
செங்கடல் ஆனாலும் யோர்தான் ஆனாலும்
தடைகளை தாண்டிட நீர் என்னோடுண்டு

ஆபத்தை எனக்கு மதிலாக மாற்றினீர்
ஆபத்தை எனக்கு அரணாக மாற்றினீர்

எல்ஷடாய் நீர்தானே எங்கள்
எல்ஷடாய் நீர்தானே

நீர் எல்ஷடாய் என்று நான் அறிவேன்
என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்
நீர் எல்ஷடாய் என்று நான் அறிவேன்
என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்

3
பாவி நான் ஆனாலும் துரோகி நான் ஆனாலும்
உமது பேரன்பு என்மேலுண்டு
பாவி நான் ஆனாலும் துரோகி நான் ஆனாலும்
உமது பேரன்பு என்மேலுண்டு

கிருபையாலே என்னை நித்தமும் நடத்தினீர்
நித்தியத்தில் சேர்த்து பாடவும் வைத்தீர்

எல்ஷடாய் நீர்தானே எங்கள்
எல்ஷடாய்

நீர் எல்ஷடாய் என்று நான் அறிவேன்
என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்
நீர் எல்ஷடாய் என்று நான் அறிவேன்
என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்

எனக்குதவின மாமலை நீரல்லவோ
உமக்கே நன்றி ஐயா
எனக்குதவின மாமலை நீரல்லவோ
உமக்கே நன்றி ஐயா

நீர் எல்ஷடாய் என்று நான் அறிவேன்
என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்
நீர் எல்ஷடாய் என்று நான் அறிவேன்
என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்

எனக்குதவின மாமலை என்றறிவேன்
என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்
எனக்குதவின மாமலை என்றறிவேன்
என்னை ஒருபோதும்

என்னை ஒருபோதும் கைவிடமாட்டீரே

எனக்குதவின மாமலை | Enakkudavina Maamalai | Sam Elijah

Don`t copy text!