பயத்தோடும் பக்தியோடும் / Bayaththodum Bakthiyodum / Bayathodum Bakthiyodum

பயத்தோடும் பக்தியோடும் / Bayaththodum Bakthiyodum / Bayathodum Bakthiyodum

1   
பயத்தோடும் பக்தியோடும்
தூய சிந்தையுள்ளோராய்
சபையார் அமர்ந்து நிற்க
ஆசீர்வாத வள்ளலாம்
தெய்வ சுதன் கிறிஸ்து நாதர்
ராஜனாய் விளங்குவார்

2   
வேந்தர்க்கெல்லாம் வேந்தர்
முன்னே கன்னிமரி மைந்தனாய்
பாரில் வந்து நின்றார் இதோ
சர்வ வல்ல கர்த்தராய்
வானாகாரமான தம்மால்
பக்தரைப் போஷிப்பிப்பார்

3   
தூத கணங்கள் முன்சென்று
பாதை செவ்வை பண்ணவே
விண்ணினின்று அவர் தோன்ற
ஜோதியில் மா ஜோதியாய்
வெய்யோன் கண்ட இருள் எனத்
தீயோன் ராஜ்யம் மாயுமே

4   
ஆறு செட்டையுள்ள சேராப்
கண்வளரா கேரூபின்
செட்டையால் வதனம் மூடி
என்றும் ஆரவாரித்து
அல்லேலூயா அல்லேலூயா
கர்த்தா என்று போற்றுவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!