அருள் நிறைந்தவர் பூரண இரட்சகர் / Arul Niraindhavar Poorana Ratchagar / Arul Nirainthavar Poorana Ratchagar

அருள் நிறைந்தவர் பூரண இரட்சகர் / Arul Niraindhavar Poorana Ratchagar / Arul Nirainthavar Poorana Ratchagar

1   
அருள் நிறைந்தவர்
பூரண ரட்சகர்
தேவரீரே
ஜெபத்தைக் கேட்கவும்
பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும்
வல்லவரே

2   
சோரும் என் நெஞ்சுக்கு
பேரருள் பொழிந்து
பெலன் கொடும்
ஆ எனக்காகவே
மரித்தீர் இயேசுவே
என் அன்பின் ஸ்வாலையே
ஓங்கச் செய்யும்

3   
பூமியில் துக்கமும்
சஞ்சலம் கஸ்தியும்
வருகினும்
இரவில் ஒளியும்
சலிப்பில் களிப்பும்
துன்பத்தில் இன்பமும்
அளித்திடும்

4   
மரிக்கும் காலத்தில்
கலக்கம் நேரிடில்
சகாயரே
என்னைக் கைதூக்கவும்
ஆறுதல் செய்யவும்
மோட்சத்தில் சேர்க்கவும்
வருவீரே

அருள் நிறைந்தவர் பூரண இரட்சகர் / Arul Niraindhavar Poorana Ratchagar / Arul Nirainthavar Poorana Ratchagar

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!