அன்பு / Anbu
பெயரோ புகழோ நிலை நிற்காதே
சொத்தோ சுகமோ கரைந்து போகுமே
பெயரோ புகழோ நிலை நிற்காதே
சொத்தோ சுகமோ கரைந்து போகுமே
உங்க அன்பு என்றும் மேலானதே
உங்க அன்பு என்றும் மெய்யானதே
உங்க அன்பு விட்டு விலகாததே
உங்க அன்பு என்னை தாங்கிடுமே
அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் நிலையானதே
அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் மாறாததே
சொந்தம் பந்தம் மறந்து போவார்கள்
நண்பர் மனிதர் விலகி போவார்கள்
சொந்தம் பந்தம் மறந்து போவார்கள்
நண்பர் மனிதர் விலகி போவார்கள்
இயேசு நீரே எந்தன் உயிரானவர்
மாறும் உலகில் நீர் உறவானவர்
என் நினைவே நீர் அழகானவர்
என் உயிரே நீர் நிறைவானவர்
அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் நிலையானதே
அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் மாறாததே
இந்த உலகின் அன்பு எல்லாம் மாயையே
இந்த உலகம் ஒரு நாள் அழிந்து போகுமே
எந்தன் வாழ்வின் ஏக்கம் எல்லாம் நீர்தானே
என் அன்பின் பாடல் என்றும் நீர்தானே
அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் நிலையானதே
அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் மாறாததே
பெயரோ புகழோ நிலை நிற்காதே
அன்பு / Anbu | Jasmin Faith