ஆழமாம் பிரதிஷ்டை செய்து கொண்டு | Aazhamam Prathistai Seithu Kondu / Aazhamaam Prathistai Seithu Kondu / Aazhamam Pradhistai Seidhu Kondu / Aazhamaam Pradhistai Seidhu Kondu
1
ஆழமாம் பிரதிஷ்டை செய்து கொண்டு
தோழராம் இயேசுவில் சார்ந்து கொண்டு
பாழான லோகத்தை தள்ளிவிட்டு
வாழவே செல்கிறேன் மோட்ச வீட்டில்
பிரதிஷ்டையை நான் புதுப்பிக்கிறேன்
கிறிஸ்தேசுவில் தினம் ஜீவிக்கவே
பிரதிஷ்டையின் ஆழம் சிலுவைதானே
இயேசுவைப் பின் செல்லுவேன்
2
ஈலோக இன்பங்கள் ஒன்றும் வேண்டாம்
மேலோக இன்பமே என் வாஞ்சையாம்
ஈலோகில் என் காலம் பறந்திடுமே
மேலோகின் பொற்காலம் வாழ்ந்திடவே
பிரதிஷ்டையை நான் புதுப்பிக்கிறேன்
கிறிஸ்தேசுவில் தினம் ஜீவிக்கவே
பிரதிஷ்டையின் ஆழம் சிலுவைதானே
இயேசுவைப் பின் செல்லுவேன்
3
பாவங்கள் யாதொன்றும் செய்யாமலே
பரிசுத்ததமாய் எந்தன் பாதை செல்வேன்
கறைகள் என் ஆத்மாவில் ஒட்டவிடேன்
குறைகளை ஒழித்தேகி முன்னால் செல்வேன்
பிரதிஷ்டையை நான் புதுப்பிக்கிறேன்
கிறிஸ்தேசுவில் தினம் ஜீவிக்கவே
பிரதிஷ்டையின் ஆழம் சிலுவைதானே
இயேசுவைப் பின் செல்லுவேன்
4
மூடரின் நெஞ்சில் எழும்பும் கோபம்
ஏழை என் நெஞ்சில் எழும்பாமலே
மூடனைப் போலவே கோபம் கொள்ளேன்
நாடுவேன் இயேசுவின் சாந்தமதை
பிரதிஷ்டையை நான் புதுப்பிக்கிறேன்
கிறிஸ்தேசுவில் தினம் ஜீவிக்கவே
பிரதிஷ்டையின் ஆழம் சிலுவைதானே
இயேசுவைப் பின் செல்லுவேன்
5
கொள்ளேனே பொறாமை யான் ஒருவர் மேலும்
நிறைப்பேன் என் உள்ளத்தை அன்பினாலே
விரும்புவேன் பிறர் வாழ்வைச் சந்தோஷமாய்
இயேசு என் நேசரின் மகிமைக்காக
பிரதிஷ்டையை நான் புதுப்பிக்கிறேன்
கிறிஸ்தேசுவில் தினம் ஜீவிக்கவே
பிரதிஷ்டையின் ஆழம் சிலுவைதானே
இயேசுவைப் பின் செல்லுவேன்
6
ஒருபோதும் முறையிடேன் ஒன்றைக் கொண்டும்
இருப்பேன் என் வாயைத்தான் மூடிக்கொண்டு
ஜீவிப்பேன் எப்போதும் யோக்கியனாக
ஆவியில் கபடங்கள் சற்றும் இன்றி
பிரதிஷ்டையை நான் புதுப்பிக்கிறேன்
கிறிஸ்தேசுவில் தினம் ஜீவிக்கவே
பிரதிஷ்டையின் ஆழம் சிலுவைதானே
இயேசுவைப் பின் செல்லுவேன்
7
பொல்லாத அவயவம் நாவைக்கட்டி
யாரையும் குறைவாகப் பேசமாலே
எவ்விதப் பொய்யையும் பேசாமலே
மனதார உண்மையைப் பேசிடவே
பிரதிஷ்டையை நான் புதுப்பிக்கிறேன்
கிறிஸ்தேசுவில் தினம் ஜீவிக்கவே
பிரதிஷ்டையின் ஆழம் சிலுவைதானே
இயேசுவைப் பின் செல்லுவேன்
8
விரோதங்கள் மனதிலும் கொள்ளாமலே
தீமையைச் சகிப்பேனே திருவருளால்
சகோதரர் என்னதான் செய்திட்டாலும்
உள்ளத்தில் அவர்களை நேசிக்கவே
பிரதிஷ்டையை நான் புதுப்பிக்கிறேன்
கிறிஸ்தேசுவில் தினம் ஜீவிக்கவே
பிரதிஷ்டையின் ஆழம் சிலுவைதானே
இயேசுவைப் பின் செல்லுவேன்
9
உத்தமர் என் இயேசு ஜீவித்தாற்போல்
அத்தனே ஜீவிக்க வாஞ்சிக்கிறேன்
கர்த்தனே கருணை செய் கிருபை கூர்ந்து
ஸ்தோத்திரம் பாடுவேன் இன்றும் என்றும்
பிரதிஷ்டையை நான் புதுப்பிக்கிறேன்
கிறிஸ்தேசுவில் தினம் ஜீவிக்கவே
பிரதிஷ்டையின் ஆழம் சிலுவைதானே
இயேசுவைப் பின் செல்லுவேன்
ஆழமாம் பிரதிஷ்டை செய்து கொண்டு | Aazhamam Prathistai Seithu Kondu / Aazhamaam Prathistai Seithu Kondu / Aazhamam Pradhistai Seidhu Kondu / Aazhamaam Pradhistai Seidhu Kondu | Swaroop Krishnan, Robert, Michel, Uma, Sangeetha, Latha, Mangalam | Johnson Babu