ஆ இன்ப இல்லமே / Aa Inba Illame

ஆ இன்ப இல்லமே / Aa Inba Illame

1   
ஆ இன்ப இல்லமே நீ என்றும்
தழைத்து வாழ்க
அன்புடன் பாலர் யாரும் அங்கு
ஐக்கியமாய் ஓங்க
அன்னை தந்தை
ஆவலாய்ப் பாலகரை
ஆண்டவன் பாதம் படைக்க

2   
ஆ இன்ப இல்லமே உன் செல்வம்
சுகம் தழைக்க
உன் மக்கள் யாவரும் ஓர் வேலை
உகந்து செய்ய
பக்தியுடன்
பற்பல சேவை ஆற்றி
கர்த்தன் அருள் பெற்று ஓங்க

3   
ஆ இன்ப இல்லமே நன்மை
பெருகும் அந்நாளில்
ஆண்டவர் நாமத்தை ஆர்வ
நன்றியுடன் போற்று
துன்பம் துக்கம்
துயரம் தொடர் நாளில்
அன்றும் அவரைக் கொண்டாடு

4   
ஆ இன்ப இல்லமே உன்
உண்மை நண்பர் கிறிஸ்தேசு
அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
என்றும் நடத்தும்
எவ்வாழ்வின்பின்
உன் மக்களை அவரே
விண்ணோடு சேர்த்துக் காப்பாரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!