ஆ பாக்கிய தெய்வ பக்தரே / Aa Bhaakkya Deiva Bhakthare / Aa Bhakkya Deiva Bhakthare

ஆ பாக்கிய தெய்வ பக்தரே / Aa Bhaakkya Deiva Bhakthare / Aa Bhakkya Deiva Bhakthare

1   
ஆ பாக்கிய தெய்வ பக்தரே
உம் நீண்ட போர் முடிந்ததே
வெற்றிகொண்டே சர்வாயுதம்
வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்
சீர் பக்தரே அமர்ந்து நீர்
இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்

2   
ஆ பாக்கிய தெய்வ பக்தரே
மா அலுப்பாம் பிரயாணத்தை
முடித்து இனி அலைவும்
சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்
சீர் பக்தரே அமர்ந்து நீர்
நல் வீட்டில் இளைப்பாறுவீர்

3   
ஆ பாக்கிய தெய்வ பக்தரே
இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே
இப்போதபாய புயலும்
உம்மைச் சேராது கிஞ்சித்தும்
சீர் பக்தரே அமர்ந்து நீர்
இன்பத் துறையில் தங்குவீர்

4   
ஆ பாக்கிய தெய்வ பக்தரே
உம் மேனி மண்ணில் தூங்கவே
மாண்பாய் எழும்புமளவும்
விழித்துக் காத்துக்கொண்டிரும்
சீர் பக்தரே மகிழ்ந்து நீர்
நம் ராஜா வருவார் என்பீர்

5   
கேளும் தூயோரின் நாதரே
பரிந்து பேசும் மீட்பரே
வாழ் நாள் எல்லாம் நல்லாவியே
கடாட்சம் வைத்து ஆளுமே
சீர் பக்தரோடு நாங்களும்
மேலோகில் சேரச் செய்திடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!