காலந்தோறும் தயவாக / Kaalandhorum Dhayavaaga / Kalandhorum Dhayavaaga
1
காலந்தோறும் தயவாக
தேவரீர் அளித்திடும்
பலவித நன்மைக்காக
என்ன ஈடுதான் தகும்
எங்கள் வாயும் உள்ளமும்
என்றும் உம்மைப் போற்றிடும்
2
மாந்தர் பண்படுத்தி வித்தை
பூமியில் விதைக்கிறார்
கர்த்தரே அன்பாக அதை
முளைத்தோங்கச் செய்கிறார்
ஏற்ற காலம் மழையும்
பெய்து பூண்டை நனைக்கும்
3
உம்முடைய சித்தத்தாலே
காற்று வெயில் வீசுமே
கால மழை பனியாலே
பயிர்கள் செழிக்குமே
உழுவோர் பிரயாசம் நீர்
சித்தியாகச் செய்கிறீர்
4
ஆதலால் மகிழ்ந்து நாங்கள்
உம்மை அன்பாய்த் துதிப்போம்
தாழ்மையோடு உமக்கெங்கள்
நெஞ்சத்தையே படைப்போம்
தேகம் போஷிக்கின்ற நீர்
ஆவியையும் போஷிப்பீர்