இப்போ நாம் பெத்லெகேம் சென்று / Ippo Naam Bethlehem Sendru / Ippo Nam Bethlehem Sendru
1
இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்
வான் ஜோதி மின்னிட
தீவிரித்துச் செல்வோம்
தூதர் தீங்கானம் கீதமே
கேட்போம் இத்தினமாம்
2
இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்
தூதரில் சிறியர்
தூய தெய்வ மைந்தன்
உன்னத வானலோகமே
உண்டிங் கவருடன்
3
இப்போ நாம் பெத்லெகேம் சென்று
ஆச்சரிய காட்சியாம்
பாலனான நம் ராஜாவும்
பெற்றோரும் காணலாம்
நம்மை உயர்த்துமாம்
பிதாவின் மகிமை
முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்
போற்றுவோம் தெய்வன்பை
4
அப்போ நாம் ஏகமாய்க் கூடி
விஸ்வாசத்தோடின்றே
சபையில் தங்கும் பாலனின்
சந்நிதி சேர்வோமே
மகிழ்ந்து போற்றுவோம்
ஜோதியில் ஜோதியே
கர்த்தா நீர் பிறந்த தினம்
கொண்டாடத் தகுமே
இப்போ நாம் பெத்லெகேம் சென்று / Ippo Naam Bethlehem Sendru / Ippo Nam Bethlehem Sendru